PNC Menon: Sobha Group தலைமை நிர்வாக அதிகாரியின் வெற்றிகரமான பயணம்

வெறும் 50 ரூபாயில் தொடங்கி 14,000 கோடி மதிப்புள்ள  சோபா லிமிடெட் & சோபா LLC-நிறுவனத்தை உருவாக்கிய PNC மேனன் சோபா லிமிடெட் & சோபா LLC-யின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். தற்போது இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக இது இருக்கிறது. இவர் ஒரு ஓமானிய கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார்.

PNC மேனன் இளம் வயதிலேயே நிதி சிக்கல்களை எதிர்கொண்டு வெறும் 50 ரூபாயில் தன்னுடைய தொழில் பயணத்தை தொடங்கி தற்போது 14,000 கோடி மதிப்பிலான ஒரு ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார்.

 PNC மேனன் கேரளாவின் பாலக்காட்டில் 1948-ல் பிறந்தவர். தனது தந்தையை 10 வயதில் இழந்த  PNC மேனன் நிதிப் பிரச்சனையால் ஆரம்பக் கல்விக்குப் பிறகு படிப்பைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  அவர் தனது குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு ஆளானார்.

சிறு சிறு வேலைகளை கேரளாவில் செய்து வந்த அவருக்கு ஓமனுக்கு சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கையில் வெறும் 50 ரூபாயுடன் 26 வயதில்  ஓமன் சென்ற PNC மேனன் பல துறைகளில் வேலை செய்ய தொடங்கி அது அவரது வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. PNC மேனன் பல சவால்களுக்கு மத்தியில் ஓமனில் 1990களில் ரியல் எஸ்டேட் துறையில் பணிக்கு சேர்ந்தார்.

ஓமனில் 1990களில் ரியல் எஸ்டேட் துறையில் PNC Menon

அவருக்கு ரியஸ் எஸ்டேட் மற்றும் இண்டீரியர் டிசைன் துறைகளில் ஆர்வம் ஏற்பட்டு  படிப்படியாக இந்த துறையின் நுணுக்களை கற்றுக் கொண்டு 1995 ஆம் ஆண்டு சோபா டெவலப்பர்ஸ் (தற்போது சோபா லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது ) என்ற ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கினார்.

தனிப்பட்ட முறையில் பல்வேறு ப்ராஜெக்டுகளை எடுத்து இவர் வடிவத்த டிசைன்களுக்கு மக்களிடையே குறிப்பாக அரபு நாட்டவரிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.   PNC மேனன் ஓமானின் சுல்தான் கபூஸ் கிராண்ட் மசூதி மற்றும் அல் புஸ்தான் அரண்மனை போன்ற சின்னமான கட்டிடங்களை கட்டுவதில் சிறப்பாக  பங்களித்தார். கட்டிட கலை படித்தவர்கள் கூட இப்படி ஒரு அலங்காரத்தையும் வடிவத்தையும் கொடுக்க முடியாது என்ற பெயரை பெற்று இன்றும் சந்தையில் நிலைத்து நிற்கிறார்.

2009 ஆம் ஆண்டில் இவருக்கு பிரவாசி பாரதிய சம்மான் புஷ்கர் விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்துள்ளது.  தற்போது சோபா லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 14,100 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. தற்போது அரபு நாடுகளில் செயல்படும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாகவும் இது உள்ளது. இந்திய பங்குச்சந்தையில் இதன் ஒரு பங்கு மதிப்பு 1,553 ரூபாய் என வர்த்தகமாகிறது. PNC மேனன் சோபாவை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

PNC Menon சமூகப் பணிகள்

ஸ்ரீ குரும்பா கல்வி மற்றும் அறக்கட்டளையை 1994 இல் நிறுவினார்.  2006 இல் 2 கிராமங்களை உள்ளடக்கிய இரண்டு பஞ்சாயத்துகளை தத்தெடுத்து ஏழைக் குடும்பங்களுக்கு வாழ்வழித்துள்ளார். மேனன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் உள்ள BAPS இந்து மந்திருக்கு 2024 இல் INR 110 மில்லியனை (USD 1.3M) வழங்கி உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply