Foxconn Industrial Internet: தமிழ்நாட்டில் Foxconn Industrial Internet $200 மில்லியன் வரை முதலீடு செய்யும் திட்டம்...

Foxconn Industrial Internet :

Foxconn Industrial Internet (FII) நிறுவனம் ஆனது Apple, Google மற்றும் HP உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்களுக்காக electronic components தயாரிக்கிறது.

Foxconn Industrial Internet (FII)  இந்தியாவில் தற்போதுள்ள தனது யூனிட்களில் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் semiconductor  தயாரிக்கும் ஒப்பந்தத்தில் முதலீடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் தமிழ்நாடு ஆனது வேகமாக iPhones உற்பத்தி செய்யும் மையமாக மாறி வருகிறது.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்துடன் தென் பிராந்தியத்தில் எலக்ட்ரானிக் கூறுகளுக்கான புதிய ஆலையை உருவாக்க 200 மில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்ய Foxconn Industrial Internet (FII) ஆனது திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் Brand Cheng, CEO of Foxconn Industrial Internet (FII) மற்றும் பிற Foxconn Industrial Internet (FII) நிறுவனப் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் Stalin உள்ளிட்ட தமிழக முக்கிய அதிகாரிகளை சந்தித்து தமிழக மாநிலத்தில் முதலீடுகள் குறித்து விவாதித்து உள்ளனர்.

இதன் முதல் கட்டமாக Foxconn Industrial Internet (FII) ஆரம்பத்தில் $180 மில்லியன் முதல் $200 மில்லியன் வரை முதலீடு செய்யும் திட்டத்தை மாநில அதிகாரிகளுடன் பகிர்ந்துள்ளது.

2024 ஆம் ஆண்டிற்குள் ஆலையை முடிக்க  Foxconn Industrial Internet (FII)  இலக்கு வைத்துள்ளது. மேலும் முதலீடுகள் ஆனது பின்னர் எதிர்பார்க்கப்படுகின்றன என்று முதல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என இரு தரப்பும் தெரிவித்தன.

ஃபாக்ஸ்கான் ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை நகருக்கு அருகில் ஒரு பரந்த வளாகத்தைக் கொண்டுள்ளது. அந்த தொழிற்சாலையை விரிவுபடுத்தவும், மேலும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் ஒப்புக்கொண்டுள்ளது.

Foxconn Industrial Internet (FII) நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது சிறப்புப் பொருளாதார மண்டலத்தை 30 ஏக்கரில் இருந்து 47.61 ஏக்கராக அதிகரிக்க, அதன் தொழிற்சாலைப் பகுதியை விரிவாக்கம் செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து Environment Clearance அனுமதி பெற விண்ணப்பித்துள்ளது.

அடுத்து வரும் ஆண்டுகளில், Foxconn Industrial Internet (FII) நிறுவனம் தனது வசதியை விரிவுபடுத்துவதால், ஊழியர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு சிறந்த வசதிகள் வழங்கும் திட்டம் :

ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் உள்ள தனது ஊழியர்களுக்காக உணவு மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதியை கட்டி வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் Foxconn Industrial Internet (FII) நிறுவனத்தில்  வேலை செய்யும்  15,000 தொழிலாளர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர்.

தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளிக்கிறது. இந்த திட்டத்தில் ஏழு குடியிருப்பு வளாகங்கள் மற்றும் இரண்டு வணிக வளாகங்கள் மற்றும் பிற பொதுவான வசதிகள்  ஆகியவை அடங்கும்.

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டம் ஆனது அடுத்த சில மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு குடியிருப்பு வளாகத்தின் ஆறு தொகுதிகளை உள்ளடக்கிய இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

Apple தயாரிப்புகளுக்கான வலுவான உள்நாட்டு தேவைக்கு பதிலளிக்கும் விதமாக கட்டுமானம் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதால்,  Foxconn Industrial Internet (FII) நிறுவனம் சீனாவிலிருந்து பல்வகைப்படுத்த வாய்ப்புள்ளது.

மேற்கு குஜராத் மாநிலத்துடனும் Foxconn Industrial Internet (FII) நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  இந்தியாவின்  semiconductor துறையில் நுழைவதைக் கண்காணித்து வருகிறது. அதன்  Chairman Young Liu வருடாந்திர semiconductor event  நிகழ்வில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தமிழ்நாடு iPhones உற்பத்தி மையமாக வேகமாக மாறி வருகிறது. :

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் Wistron manufactures நிறுவனம் ஆப்பிள் சாதனங்களை தயாரிக்கிறது.

Tata Electronics ஆனது Apple நிறுவனத்துடன் இணைந்து  iPhone-க்கான இயந்திர பாகங்களை வடிவமைத்து தயாரிக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மேற்கே சுமார் ஐந்து மணிநேரம் தொலைவில் உள்ள ஓசூர் அருகே அதன் வசதிக்காக 8,000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளது.

Latest Slideshows

Leave a Reply