Foxconn Plans To Assemble Apple iPad In TN : தமிழ்நாட்டில் ஆப்பிள் iPad உற்பத்தி தொடங்க தீவிரம்

Foxconn Plans To Assemble Apple iPad In TN :

ஆப்பிள் நிறுவனம் ஆனது தமிழ்நாட்டில் iPad உற்பத்தியைத் தொடங்க தீவிரமாக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டுக்கு ipad உற்பத்தியை விரிவாக்கம் செய்ததை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் ipad உற்பத்தியை விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்து வருகின்றது. ஏற்கனவே தமிழ்நாடு ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை உற்பத்தி செய்யக்கூடிய சிறந்த மையமாக உள்ளது. இதுவரை ஐபோன் உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது இந்தியா ஐபோன் நிறுவனத்தின் மற்ற பொருள்களையும் உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலேயே ஆப்பிள் நிறுவனம் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் இந்த உற்பத்தியை தொடங்குவதற்கு Foxconn நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக (Foxconn Plans To Assemble Apple iPad In TN) தெரியவந்துள்ளது.  ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை 2 ஆண்டு காலத்தில் இரட்டிப்பாக்க Foxconn நிறுவனம் ஆனது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள இருக்கிறது. இந்த 2024 ஆம் ஆண்டு வருடாந்த  ipad  ஏற்றுமதிகள் ஆனது 49 மில்லியனை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஏற்றுமதிகள் ஆனது ஆண்டுக்கு ஆண்டு 4.5% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசிடம் Foxconn நிறுவனம் ipad உற்பத்தி தொடங்குவது தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டதாக தகவல் (Foxconn Plans To Assemble Apple iPad In TN) வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் Mobile பாகங்கள் மீதான இறக்குமதி வரி 20 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ள நடவடிக்கையால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ipad உற்பத்தியை தொடங்குவதற்கு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்திய அரசாங்கத்தின் விநியோகச் சங்கிலிகளை ஈர்க்கும் முயற்சிகளால் Foxconn நிறுவனம் ஊக்குவிக்கப்பட்டு, இந்த திட்டத்தினை செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புவிசார் அரசியல் கவலைகள் மற்றும் அரசாங்கக் கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவின் BYD உடனான Foxconn நிறுவனத்தின் முந்தைய ஒத்துழைப்பு தோல்வியுற்ற பிறகு, Foxconn தொழில்நுட்ப நிறுவனமானது விரைவில் ஒரு உற்பத்தி கூட்டாளரைத் தேடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், Foxconn நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில்  விரைவில் உற்பத்தியை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply