Foxtail Millet in Tamil: தினை அரிசியின் பயன்கள்...
Foxtail Millet in Tamil: சிறு தானியங்களில் தினை அரிசி முக்கியமானது. தினை, தானியங்களில் அதிக பயிரிடப்படும் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்றும் கூறலாம். இதனை உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம் போன்றவை உள்ளன. மற்ற தானியங்களை விட தினையில் அதிக கால்சியம் உள்ளது. அரிசி, கோதுமை, கேழ்வரகு ஆகியவற்றை விட இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. கோதுமையை விட புரதம் குறைவாக இருந்தாலும், மற்ற பொருட்களுடன் கலந்து உண்ணும்போது அது சமநிலையில் இருக்கும். தற்போது தினையினால் கிடைக்கும் நன்மைகளை காணலாம்.
தினை அரிசி நன்மைகள் (Foxtail Millet in Tamil)
இதய நோய் தடுக்க
வைட்டமின் B1 இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமானதாகும். அவை தசைகள் மற்றும் நரம்புகளுக்கு இடையே செய்திகளை பரிமாற்ற உதவுவதோடு இதயத்தின் செயல்பாடுகளைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. இந்த B வைட்டமின் குறைபாடு இதய செயல்பாடு பலவீனமடைவதற்கு வழிவகுக்கிறது. இதயத்தை பலம் சேர்க்கும் வைட்டமின் B1 தினையில் இருக்கிறது. இதனால் தினை அரிசியை உட்கொள்வதன் மூலம் இதய நோய் வராமல் தடுக்க முடியும். மேலும் இதயத்தை பலப்படுத்துகிறது. இந்த B1 வைட்டமின் மறதி நோய் என்னும் அல்சைமர் நோய் முன்னேறாமல் தடுக்கவும் உதவுகிறது. இருப்பினும் இது குறித்து சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நீரிழிவு நோய்க்கு
Foxtail Millet in Tamil: தினை என்பது குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்ட உணவு ஆகும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்று சொல்லலாம். பொதுவாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அல்லது அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவர்கள் தினை அரிசியை எடுத்துக் கொள்ளலாம். ஜீரணமாக அதிக நேரம் எடுப்பதால், அரிசியைப் போல உடனே செரித்து அதிலிருக்கும் குளுக்கோஸை இரத்தத்தில் கலப்பதில்லை. சர்க்கரை நோய் மட்டுமின்றி, இதய நோய், உடல் பருமன், மூட்டு வலி உள்ளவர்களும் தினை சாதத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அவை உடல் சோர்வையும் ஏற்படுத்தாது. இவற்றை சாப்பிடும்போது உடல் இழந்த ஆற்றலை மீண்டும் பெற முடியும்.
மூளை ஆரோக்கியத்திற்கு
Foxtail Millet in Tamil: உடலில் இரும்புச்சத்து போதுமானதாக இருந்தால், அது உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சீராக எடுத்துச் செல்கிறது. மூளையின் செயல்பாட்டிற்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் வழங்கப்படுகையில் அறிவாற்றல் மேம்படும். நினைவாற்றலை மேம்படுத்துகிறது. வயதான காலத்தில் ஏற்படக்கூடிய மூளைக் குறைபாடுகளைத் தடுக்கிறது. மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்க இரும்பு அவசியம். எனவே இரும்புச்சத்து நிறைந்த தினை உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. தினைகளில் உள்ள புரதம் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
எலும்புகள் வலுவடைய
Foxtail Millet in Tamil: இன்று குழந்தைகளும் கால்சியம் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இயற்கையாகவே கால்சியம் குறைபாடு இருக்கும். இப்போது இது அதிகரித்து வருகிறது. தினை அரிசியில் கால்சியம் அதிகம் உள்ளதால், தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் வலுவடையும். பற்கள் வலிமையாகும். வளரும் குழந்தைகளின் உணவில் தினை அரிசியை தவறாமல் சேர்ப்பது எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் மற்றும் வளர்ச்சிக்குப் பின் ஏற்படும் எலும்பு இழப்பைத் தடுக்கிறது. இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால் கண்பார்வையை மேம்படுத்துகிறது.
கப நோய் அகற்ற
Foxtail Millet in Tamil: இரைப்பை நோய்களை கட்டுப்படுத்தும் குணம் தினைக்கு உள்ளது. சளி பிடிக்கும் போது தினை அரிசி கஞ்சியை குடித்தால் அதன் வேகத்தை கட்டுப்படுத்தும். இவை காய்ச்சலின் போது உடலுக்கு எப்போதும் நன்மை பயக்கும். இதை வாரத்திற்கு இரண்டு முறை உணவாக எடுத்துக் கொள்ளலாம். தினையில் தேன் கலந்து குழந்தைகளுக்கு உருண்டைகளாக கொடுக்கலாம். தினை கஞ்சி செய்து குடிக்கலாம். தினை நல்லது என தினமும் சாப்பிடக்கூடாது. அடிக்கடி எடுத்துக் கொண்டால் பித்த உற்பத்தியை அதிகரிக்கும்.
ஆண்களுக்கு நன்மை பயக்க
Foxtail Millet in Tamil: தினை நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். நரம்புகளுக்கு வலு கொடுத்து முருகேற்று, குணம் கொண்டது. இளவயசு ஆண்களுக்கு அடிக்கடி தினை அரிசியில் செய்த தினை உப்புமா , தினை புட்டு, தினை லட்டு, தினை கஞ்சி, தினை முறுக்கு, தேனுடன் கலந்த தினை என இளைஞர்களுக்கு அடிக்கடி வழங்கப்படுகிறது. இதனுடன் தினையை அரைத்து தேனில் கலந்து களியாக்கி கொடுப்பார்கள். இது ஆண்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.
மாதவிடாய் வலியை போக்க
Foxtail Millet in Tamil: புரோஸ்டாக்லாண்டின்கள் மாதவிடாய் பிடிப்பைத் தூண்டும். மெக்னீசியத்தை தொடர்ந்து உட்கொள்வது மாதவிடாய் வலியின் வலியைக் குறைக்கும். ஊட்டச்சத்து, நார்ச்சத்து மற்றும் புரதங்கள் இருந்தபோதிலும், தினை மெக்னீசியத்திலும் நிறைந்துள்ளது. இது மாதவிடாய் சுழற்சியின் போது கருப்பையின் தசைகளை தளர்த்த உதவுகிறது. தினைக்கு மாதவிடாய் வலியை குறைக்கும் குணத்தை கொண்டுள்ளது.
சிறந்த தூக்கத்தை கொடுக்க
தினையில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உடலில் செரோடோனின் அளவை அதிகரிக்கிறது. செரோடோனின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே, தினையை தொடர்ந்து உட்கொள்வது நல்ல மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தை அளிக்கும்.
செரிமானத்தை ஊக்குவிக்க
Foxtail Millet in Tamil: தினையில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை ஊக்குவிக்கும் உணவிற்கு ஏற்ற உணவாக அமைகிறது. இது மலச்சிக்கல், வாய்வு, வீக்கம், தசைப்பிடிப்பு போன்ற சில செரிமான நோய்களை எதிர்த்துப் போராடுகிறது, குடல் இயக்கத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்க
Foxtail Millet in Tamil: தினையில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை ஊக்குவிக்கும் உணவிற்கு ஏற்ற உணவாக அமைகிறது. இது மலச்சிக்கல், வாய்வு, வீக்கம், தசைப்பிடிப்பு போன்ற சில செரிமான நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. குடல் இயக்கத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது.
உடல் எடையை அதிகரிக்காமல் பாதுகாக்க
தினை அரிசியில் புரதச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. அதே நேரத்தில், கொழுப்பு சுத்தமாக இல்லாதவை. தினையை வழக்கமாக உட்கொள்வது உடலில் உள்ள கொழுப்பின் அளவை சமப்படுத்த உதவுகிறது. தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிப்பதை தடுத்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இவ்வளவு நன்மைகள் கொண்ட தினை அரிசியை சாப்பிட்டால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
Latest Slideshows
-
11733 Crore Collection In Bond Registrations : பத்திரப்பதிவுகள் நடப்பு நிதியாண்டில் ரூ.11,733 கோடி ரூபாய் வசூல்
-
Vaa Vaathiyaar Teaser : வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியீடு
-
Kanguva Review : கங்குவா படத்தின் திரை விமர்சனம்
-
IND Vs SA 3rd T20 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி
-
Children's Day 2024 : குழந்தைகள் தின வரலாறும் முக்கியத்துவமும்
-
Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு
-
Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
-
ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
-
அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்