France Abortion : கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கிய பிரான்ஸ்
கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கிய முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் (France Abortion) பெற்றுள்ளது. கருக்கலைப்பை பெண்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 780 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
France Abortion - கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமை :
திங்களன்று (நேற்று) பிரான்ஸ் பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கருக்கலைப்பை பெண்களுக்கு அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். சபையில் இருந்த மொத்த உறுப்பினர்களில் 780 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 72 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் சமீபத்தில் திரும்பப் பெறுவது போன்ற செயல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கருக்கலைப்பை பெண்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் (France Abortion) பெற்றுள்ளது. இம்மானுவேல் மேக்ரான் இந்த நடவடிக்கை பிரான்சுக்கு பெருமையாகவும், உலகிற்கு செய்தியாகவும் உள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.
பிரான்சில் கடந்த 1975ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், 1958ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்நாட்டு அரசியலமைப்பில் பெண் சுதந்திரம் தொடர்பான பிரிவை மறுஆய்வு செய்ய, பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று நடந்தது. நவீன அரசியலமைப்பின் 25வது திருத்தம் இது. பிரான்ஸ், கருக்கலைப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட முதல் திருத்தம் (France Abortion) இதுவாகும். இதனைக் கொண்டாடும் வகையில் பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரம் வண்ண விளக்குகளால் “மை பாடி மை சாய்ஸ்” என்ற வாசகத்தை ஒளிரச் செய்தது.
பிரான்சால் நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய சட்டத்தின்படி, குறைந்தபட்சம் கர்ப்பத்தின் முதல் 14 வாரங்களில் அரசு நிதியுதவியுடன் கருக்கலைப்பு (France Abortion) செய்ய அனுமதிக்கிறது. பெற்றோரின் அனுமதியின்றி சிறார்களும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். கருக்கலைப்புக்கு எதிரான பேச்சு இணையத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்காக போராடும் ஒரு தரப்பினர் பேராதரவு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், நாட்டில் கருக்கலைப்பு உரிமைக்கு பெரும் ஆதரவு இருப்பதால், அரசியல் லாபத்திற்காக மேக்ரான் இதை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். கத்தோலிக்க அமைப்பின் உறுப்பினர்கள் கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
Latest Slideshows
-
Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
-
Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
-
Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
-
Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
-
SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்