Free Jailer Movie Tickets: ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் லீவ் கொடுத்த நிறுவனம்....

Free Jailer Movie Tickets :

ஜெயிலர் திரைப்படம் 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், மதுரை Uno Aqua Care நிறுவனம், படத்திற்கான இலவச டிக்கெட்டுடன் கூடிய விடுமுறை அளித்து அசத்தியுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜெயிலரின் முதல் சிங்கிள் காவாலா வெளியாகி எல்லா இடங்களிலும் ஹிட் ஆனது. இந்த பாடலில் தமன்னா ஆடிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி, குழந்தைகள், பிரபலங்கள் என பலரும் பாடலுக்கு ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 10-தேதி வெளியாக இருக்கும் நிலையில், மதுரையில் Uno Aqua Care நிறுவனம் ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் லீவ் கொடுத்துள்ளது.

சென்னை மற்றும் பெங்களூருலில் 8 கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதை தொடர்ந்து ஒரு ஆச்சரியமான முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியாவதையொட்டி, எங்களின் மனிதவளத் துறைக்கு விடுப்பு விண்ணப்பங்கள் குவிவதைத் தடுக்க, எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளோம்”.

Latest Slideshows

Leave a Reply