Free Treatment For Cancer Patient: புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை விஜய் ஆண்டனி அதிரடி அறிவிப்பு

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று விஜய் ஆண்டனி அறிவித்துள்ள இந்த தகவல் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகில் இசைமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும் தன்னுடைய பணியை தொடங்கி பின்னர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டவர் விஜய் ஆண்டனி. தன்னுடைய திறமைகளை செயல்படுத்தி அதில் வெற்றி கண்டவர் ஆவார். இவர் நடிப்பில் கடந்த 2016ல் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இவரே இயக்கி தயாரித்து நடித்திருந்தார். இத்திரைப்படம் மே 19 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இப்படம் ஒரு பிரிவினரிடமிருந்து கலவையான விமர்சனங்களையும், மற்ற பிரிவினரிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. குறிப்பாக இந்த படம் தமிழை விட தெலுங்கில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வசூலும் வாரி குவித்துள்ளது. அதிகரித்தது. ரூ.15 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம் சுமார் ரூ. 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் வெற்றியை விஜய் ஆண்டனி ஏழை எளிய மக்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் உதவி செய்து கொண்டாடி வருகிறார்.

விஜய் ஆண்டனியின் நெகிழ்ச்சியான செயல்

அந்த வகையில் கடந்த வாரம் திருப்பதியில் உள்ள பல பிச்சைக்காரர்களுக்கு போர்வை, செருப்பு, மின்விசிறி, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்னர் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 50 மேற்பட்ட பிச்சைக்காரர்களுக்கு 5 Star ஓட்டலில் உணவளித்தார். இந்த செயல்கள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது.

இதையடுத்து, புற்றுநோய்க்கு உதவி தேவைப்படுவோர் தாராளமாக தன்னை அழைக்கலாம் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். antibikiligs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுமாறு கூறியள்ளார். இந்த திட்டத்தை ஆந்திராவில் உள்ள ஜிஎஸ்எல் மருத்துவமனையுடன் இணைந்து இலவச சிகிச்சை அளிக்கும் இந்த திட்டத்தை விஜய் ஆண்டனி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில புற்றுநோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். இவரின் செயல்களானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply