FSSAI Strict Orders : Flipkart, Amazon நிறுவனங்ககளுக்கு FSSAI அதிரடி உத்தரவு

Flipkart, Amazon ஆரோக்கிய பானங்கள் மற்றும் ஆற்றல் பானங்கள் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது- FSSAI Strict Orders :

தற்போது ஒரு ஸ்மார்ட் போனில் உள்ள அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற செயலிகள் மூலம் இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் நம்மால் பொருட்களை பெற முடிகிறது. லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்களை ஆன்லைனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் வைத்துள்ளனர். எளிமையான முறையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்கிக்  கொள்ளலாம். தற்போது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), “பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் சில பானங்களின் வகைகளுக்கு துல்லியமான லேபிளிங் வார்த்தையை பயன்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளது. தவறான வார்த்தைகள் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் என்பதால் எஃப்எஸ்எஸ்ஏஐ இந்த உத்தரவை (FSSAI Strict Orders) இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பிறப்பித்துள்ளது.

ஹெல்த்டிரிங்க் என்ற சொல் ஆனது 2006 உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், உணவுத் தொழிலை நிர்வகிக்கும் தொடர்புடைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்குள் தரநிலைப்படுத்தப்படவில்லை. அதன்படி, பால், தானியங்கள் அல்லது மால்ட் அடிப்படையிலான பானங்களுக்கு  இனிமேல் ஆரோக்கிய பானங்கள் (Health Drinks) அல்லது ஆற்றல் பானங்கள் (Energy Drink) என்ற வார்த்தைகளை இ-காமர்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது. குறிப்பிட்ட அளவுகோல்களுக்குள் வரும் தயாரிப்புகளுக்கு மட்டுமே எனர்ஜி டிரிங்க் பயன்படுத்த (FSSAI Strict Orders) அனுமதிக்கப்படுகிறது.

ஆரோக்கிய பானம் என்ற வார்த்தைக்கான தெளிவான வரையறை நாட்டின் உணவு சட்டங்களுக்குள் இல்லாததன் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. அதேபோன்று, ஏற்கனவே உள்ள விதிமுறைகளின்படி எனர்ஜி டிரிங்க் என்பது கார்பனேற்றம் மற்றும் கார்பனேற்றம் செய்யப்படாத நீர் சார்ந்த சுவை கொண்டபானங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ஆற்றல் பானங்களின் நுகர்வு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. எனவே இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த உணவு பாதுகாப்பு அமைப்பு (FSSAI) தற்போது தடைவிதித்துள்ளது. அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் சில பான வகைகளுக்கு துல்லியமான லேபிளிங்கை வலியுறுத்தும் உத்தரவை FSSAI (FSSAI Strict Orders) பிறப்பித்துள்ளது. இது தெளிவு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சி என்று FSSAI கூறியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply