Gaganyaan And Chandrayaan-4 ISRO Announced Dates : ககன்யான் மற்றும் சந்திரயான்- 4 தேதிகளை அறிவித்தார் இஸ்ரோத தலைவர் சோமநாத்
மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் நம் இந்தியாவின் லட்சிய (Gaganyaan And Chandrayaan-4 ISRO Announced Dates) திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் மூலம் 4 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு இஸ்ரோ (ISRO) திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இது இந்தியாவின் முதல் விண்வெளி குழு (Crewed Indian Space Mission) பயணமாகும்.
Gaganyaan And Chandrayaan-4 ISRO Announced Dates
நேற்று நடைபெற்ற அகில இந்திய வானொலி (ஆகாஷ்வானி) நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோவின் 10-வது தலைவர் சோமநாத் அவர்கள் ககன்யான் மற்றும் சந்திரயான்- 4 திட்டத்திற்கான உத்தேச தேதிகளை அறிவித்துள்ளார். மனித விண்வெளி பயண திட்டமான ககன்யான் திட்டம் (Gaganyaan Project) வரும் 2026-ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் (Gaganyaan And Chandrayaan-4 ISRO Announced Dates) என்றும் சந்திரயான்- 4 திட்டமான நிலவுக்கு சென்று மண் மற்றும் சிறு கற்களை சேகரித்து திரும்பும் சந்திரயான்-4 திட்டம் வரும் 2028- ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
சந்திரயான்-5 திட்டத்திற்கு ஜப்பானுடன் இணையும் இஸ்ரோ
மேலும் இஸ்ரோ ஜப்பான் நாட்டின் விண்வெளி நிறுவனமான ஜாக்ஸா உடன் இணைந்து சந்திரயான்-5 திட்டத்தை மேற்கொள்ளும் எனவும் இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு சந்திர துருவ ஆய்வு (Lunar Polar Exploration) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ தேதியை அவர் தெரிவிக்கவில்லை. சந்திரயான்-4 திட்டமிடப்பட்ட 2028- ஆம் ஆண்டுக்கு பிறகு (Gaganyaan And Chandrayaan-4 ISRO Announced Dates) சந்திரயான்-5 திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.
மேலும் சந்திரயான்-5 விண்கலமான ‘லூபெக்ஸ்’ பற்றி பேசிய அவர் இது மிகவும் கடினமான மிஷனாக இருக்கும் எனவும், இந்த திட்டத்திற்கு லேண்டர் இந்தியா வழங்கும் என்றும் ரோவர் மட்டும் ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு வரும் என தெரிவித்தார். மேலும் இதுகுறித்து பேசிய அவர் சந்திரயான்-3 திட்டத்தில் இருந்த ரோவர் எடையானது வெறும் 27 கிலோ மட்டுமே. ஆனால் இந்த சந்திரயான்-5 திட்டத்தில் விண்கலம் சுமார் 350 கிலோ எடையுள்ள ரோவரை சுமந்து செல்லும். மேலும் இது மிகவும் சவாலான பணியாகும். இது சந்திரனில் மனிதனை தரையிறக்கும் திட்டத்திற்கு மிக நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லும் என தெரிவித்தார்.
Latest Slideshows
-
Children's Day 2024 : குழந்தைகள் தின வரலாறும் முக்கியத்துவமும்
-
Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு
-
Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
-
ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
-
அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்
-
Indian Team New Captain : இந்திய அணியின் கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
-
Discovered A New Planet : பூமி மாதிரியே இருக்கும் புது கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
-
Kanguva Trailer : சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
Mushroom Benefits : தினமும் காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்