Gaganyaan Project 2025 : 2025-ம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்

Gaganyaan Project 2025 :

நடப்பு புத்தாண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின் (Gaganyaan Project 2025) அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான ‘எக்ஸ்போ சாட்’ செயற்கைக்கோளை PSLV C58 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று முன்தினம் (01/01/2024) காலை 9.02 AM மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் பூமியிலிருந்து 650 கிலோமீட்டர் சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். இந்த ‘எக்ஸ்ரே போலாரிமீட்டர்’ செயற்கைக்கோளானது இந்தியாவின் முதலாவது எக்ஸ்ரே வகை செயற்கைக் கோளாகும். இது பூமியின் உள்ள கருந்துளை பற்றிய ஆய்வுகளை நடத்தும் என சோம்நாத் தெரிவித்தார்.

விண்ணில் செலுத்தப்பட்ட PSLV C58 ராக்கெட்டில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ‘லால் பகதூர் சாஸ்திரி’ தொழில்நுட்ப நிறுவனத்தின் அனைத்து மகளிர் குழுவினரால் உருவாக்கப்பட்ட சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. ‘வீசாட்’ என பெயரிடப்பட்ட அந்த சிறிய செயற்கைக் கோளை கேரள அரசின் ‘மாணவர் செயற்கைக்கோள்’ திட்டத்தின் கீழ் வடிவமைத்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய சோமநாத் 2024-ம் ஆண்டு இஸ்ரோ பல்வேறு விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேவையான அனைத்து பரிசோதனைகளும் சரியாக அமையும் பட்சத்தில் 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் ‘ககன்யான் திட்டம்’ (Gaganyaan Project 2025) செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து “நிசார்” எனும் செயற்கைகோளை விண்ணில் செலுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர் இந்த எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து பணிகளும்  முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply