Gaganyaan : நாசாவை போல இஸ்ரோ நிலவுக்கு எப்போது மனிதனை அனுப்பும்?

நேற்று முன்தினம் சந்திரயான் 3 மிஷனில் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் லேண்டரைத் தரையிறக்கிய முதல் நாடு என்கிற வரலாற்றுச் சிறப்பை நம் இந்தியா பெற்றுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA), அப்போலோ என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவினரை நிலவுக்கு அனுப்பியது போல இந்தியா எப்போது நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் என்கிற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. இதற்கு இஸ்ரோ தரப்பு கூறும் பதிலைப் பார்ப்போம்.

ககன்யான் (Gaganyaan) விண்கலம் :

Gaganyaan : ககன்யான் திட்டத்தின் மூலம் நிலவின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி, அவர்கள் அங்கு வெற்றிகரமாக ஆராய்ச்சிகளை முடித்துவிட்டு மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த விண்கலத்தில் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த விண்கலமானது (GSLV மார்க் III) மூலம் வருகிற 2025 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டமானது கடந்த டிசம்பர் 18, 2014 இல் நடைபெற்றது.

Gaganyaan திட்டத்தின் தொடக்க நிலை :

Gaganyaan திட்டத்துக்கான தொடக்கநிலை ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் தொடர்பான முன்னேற்பாடுகள் அனைத்தும் 2006 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. முதன் முதலில் இதற்கு “சுற்றுப்பாதை வாகனம்” என்று பொதுப் பெயரிடப்பட்டது. இத்திட்டமானது முதலில் மேர்க்குரித் திட்டம் போன்றே வடிவமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் மார்ச், 2008 இல் நிதி பெறுவதற்காக இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் இந்த மனித விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்கான இசைவாணையை பிப்ரவரி, 2009 இல் அளித்தது. பயணிகள் அல்லாத சோதனை ஓட்டமானது முதலில் 2013 இல் நடத்தத் திட்டமிட்டுருந்தனர். பின் அது 2016 ஆம் ஆண்டிற்கு மாற்றம் ஆனது.

ககன்யானில் எத்தனை பேர் பயணிக்கலாம் :

ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 மெட்ரிக் டன் எடையுள்ள விண்கலம் ஆகும். இதில் மூன்று பேர் மட்டுமே நிலவின் சுற்றுப்பாதைக்கு சென்று புவிக்கு திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள்ளது. இந்த திட்டம் 7 நாட்கள் வரை சுற்றுப்பாதையில் இருக்கும். இது ரஷ்யா விண்கலம் போன்ற விண்கலம் ஆகும்.

Gaganyaan திட்டத்திற்கு எங்கு பயற்சி அளிக்கப்படுகிறது :

இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து, இந்தியாவின் இஸ்ரோ (ISRO) அமைப்பும், ரஷ்யாவின் “க்ளாவ்கோஸ்மாஸ்” (Glavkosmos) என்கிற அமைப்பும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்திய விமானப் படையின் ஒரு குரூப் கேப்டன் மற்றும் மூன்று விங் கமாண்டர்களைக் கொண்ட நான்கு பேர் ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்கள். பயிற்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், கொரோனா பெருந்தொற்று தாக்கம் காரணமாக, அவர்களின் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் மார்ச், 2021-இல் பயிற்சியை நிறைவு செய்தார்கள். மீண்டும் இந்த அதிகாரிகளுக்கு இந்தியாவில் சிறப்பு விண்கலன் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இஸ்ரோ ஏன் நிலவின் தென் துருவத்திற்கு முக்கியத்துவம் தருகிறது :

நிலவின் தென்துருவ பகுதியில் தண்ணீர், மாலிக்கியூல்கள் மற்றும் பனிப்படலம் இருப்பது கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 1 சோதனையில் தெரியவந்தது. அதனாலேயே அதன் தென் துருவத்துக்கு இஸ்ரோ அமைப்பானது இத்தனை முக்கியத்துவம் அளிக்கிறது. தென் துருவத்தில் நம் இந்திய விண்வெளி வீரர்கள் நேரில் சென்று இன்னும் பல சோதனைகளை செய்யும் காலம் விரைவில வரும் என இஸ்ரோ தற்போது தெரிவித்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் நிலவில் இஸ்ரோவின் சோதனைகள் மனிதகுலத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல உதவும் என்பதை மறுப்பதற்கில்லை.

Latest Slideshows

Leave a Reply