Gaganyatri Goes To International Space Station : “ககன்யாத்ரி” என்ற இந்திய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறார்

நம் இந்தியாவின் இஸ்ரோவைச் சேர்ந்த “ககன்யாத்ரி” என்ற விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (Gaganyatri Goes To International Space Station) பயணம் மேற்கொள்வார் என்று விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் Indian Space Research Organisation (ISRO) நாசாவுடன் சேர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வதற்கான (International Space Station) கூட்டுப் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளார். இந்த திட்டம் இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியாகும்.

Gaganyatri Goes To International Space Station - “ககன்யாத்ரி” விண்வெளி வீரர் :

“ககன்யாத்ரி” என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான இந்த பணியில் பங்கேற்பார். இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் ககன்யான் திட்டத்திலும் அதன் பரந்த விண்வெளி ஆய்வு முயற்சிகளிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸியம்-4 மிஷன் :

  • ஆக்ஸியம்-4 மிஷனின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வரும் ஆகஸ்ட் 2024-க்கு முன்னதாக இந்த பணி தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
  • இதற்காக இந்திய விண்வெளி நிறுவனமும், ஆக்ஸியம் ஸ்பேஸும் (Axiom Space) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான (International Space Station) நான்காவது தனியார் விண்வெளிப் பயணத்திற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.
  • ககன்யான் திட்டம் இந்தியாவின் ஒரு லட்சிய திட்டமாகும். இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்திறனை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு சுதந்திரமாக அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் (Gaganyaan) திட்டத்திற்கு இந்திய விமானப்படையிலிருந்து நான்கு விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • அவர்கள் தற்போது பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ரஷ்யாவில் அடிப்படை விண்வெளிப் பயணத் தொகுப்புகள் அடங்கிய பயிற்சித் திட்டத்தின் மூன்று செமஸ்டர்களில் இரண்டை அவர்கள் ஏற்கனவே முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply