Gambhir Support Pandya : ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசிய கவுதம் கம்பீர்

மும்பை :

  • ஹர்திக் பாண்டியா குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்களாக கருதப்படும் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் பேசினர். அவர்களை கவுதம் கம்பீர் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
  • “மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா சரியாக செயல்படவில்லை. உண்மையாக நடந்து கொள்ளவில்லை. எதிரணியினரிடம் ஆணவமாக நடந்து கொண்டார்” என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். இதேபோல் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப்பை இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்தார்.

Gambhir Support Pandya :

இந்நிலையில் கவுதம் கம்பீர் இருவரையும் தாக்கியுள்ளார். 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணி மிகவும் மோசமாக செயல்பட்டு புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதை எடுத்துக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ், ஹர்திக் பாண்டியா ஆணவத்துடன் செயல்படுகிறார் என்று கூறியிருந்தார்.

அது குறித்த கேள்விக்கு பதிலளித்த (Gambhir Support Pandya) கவுதம் கம்பீர், ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் கேப்டனாக இருந்த போது எப்படி இருந்தது? கெவின் பீட்டர்சன் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் கேப்டனாக இருந்த போது சிறப்பாக செயல்படவில்லை. அவர்களின் சாதனைகளைப் பார்த்தால், ஒரு கேப்டனாக மிகவும் மோசமாக உள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் ஏபி டி வில்லியர்ஸ் கேப்டனாக இருந்ததாகத் தெரியவில்லை. அவர் ஸ்கோரின் அடிப்படையில் பெரிதாக எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை. அவர் எந்த அணிக்காகவும் சாதித்ததாக தெரியவில்லை. ஆனால் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா. எனவே நாம் ஆரஞ்சுகளை ஆரஞ்சுகளுடன் ஒப்பிட வேண்டும். “ஆரஞ்சு பழங்களை ஆப்பிளுடன் ஒப்பிடாதீர்கள்” என்று கவுதம் கம்பீர் கடுமையாக (Gambhir Support Pandya)  பதிலளித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply