Game Changer Release Date : ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ராம் சரண். மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிரஞ்சீவியின் மகனான இவர், மாவீரன் படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். ஆர்.ஆர்.ஆர். படம் இவரது புகழை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது. இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் (Game Changer Release Date) கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம் சரணின் கேம் சேஞ்சர் :

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். பழம்பெரும் இயக்குனர் ஷங்கர் ராம் சரண் உடன் இணையும் முதல் படம் என்பதாலும், நேரடியாக இயக்கும் முதல் தெலுங்கு படம் என்பதாலும் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு ராம் சரண் நடித்து வரும் படம் என்பதால் இந்த படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற தில் ராஜுவிடம் கேம் சேஞ்சர் என்று ரசிகர்கள் கேட்டனர். அதுக்கு அவர் கேம் சேஞ்சரா? கிறிஸ்துமஸுக்கு பார்க்கலாம்?  என்று கூறினார்.

Game Changer Release Date - கிறிஸ்துமஸ் வெளியீடு :

அவரது பதிலைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் கேம் சேஞ்சர் படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என (Game Changer Release Date) எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தின் வெளியீடு தற்போது முடிவடைந்த நிலையில், ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தின் மீது முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஜெயராம், சமுத்திரக்கனி, கியாரா அத்வானி, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தில் ராம் சரண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஊழலுக்கு எதிராக போராடி, நேர்மையாக தேர்தலை நடத்துவதே படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜுவின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. தெலுங்கில் நேரடியாக உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

Latest Slideshows

Leave a Reply