Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் (Game Changer Review) எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை தற்போது காணலாம்.

கேம் சேஞ்சர்

தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் இந்த பொங்கலுக்கு (Game Changer Review) சரவெடியாக இருக்குமா? இருக்காதா? என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், ரசிகர்களுக்கும் உள்ளது. RRR படத்தின் மூலம் மெகா ஹிட் கொடுத்து சர்வதேச அளவில் பிரபலமானவர் ராம் சரண். அவரை வைத்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள படம் தான் கேம் சேஞ்சர்.

அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜு பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் படத்திற்கு ஆந்திராவில் அதிகாலையில் சிறப்பு காட்சிகள் அரங்கேறின. அதன் அடிப்படையில் கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கேம் சேஞ்சர் திரை விமர்சனம் (Game Changer Review)

ராம் சரண் மட்டுமே தனது நடிப்பினால் கேம் சேஞ்சர் படத்தை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். ஷங்கரின் திறமையான இயக்கம் பெரிதாகத் தெரியவில்லை (Game Changer Review) என்றாலும், கேம் சேஞ்சர் படம் பல இடங்களில் தள்ளாடுகிறது. கியாரா அத்வானியுடனான காதல் காட்சிகள், வெண்ணிலா கிஷோர், சுனில் உடனான நகைச்சுவைக் காட்சிகள் எல்லாமே மொக்கையாக அமைந்துள்ளது. ப்ளாஷ்பேக் பகுதிதான் ஹைலைட். 2.5 ரேட்டிங் கொடுக்கலாம். நெட்டிசன்கள் ஷங்கர் சொதப்பியதை விமர்சித்து வருகின்றனர்.

இந்த பொங்கலுக்கு நிச்சயமாக ராம் சரண் ரசிகர்களுக்கு ஒரு விருந்து தான். ஷங்கர் இஸ் பேக் படம் எபிக் பிளாக்பஸ்டர் என்று ராம் சரணின் ரசிகர்கள் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை (Game Changer Review) ஆர்வத்துடன் பதிவிட்டு வருகின்றனர். கேம் சேஞ்சர் படத்தை ஷங்கரின் கேரியர் சேஞ்சர் என்றும் பாராட்டி வருகின்றனர். ராம் சரணின் அட்டகாசமான நடிப்பு, எஸ்.ஜே.சூர்யா தனக்கு கொடுத்த வில்லத்தனத்தை சரியாக செய்துள்ளார். கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் தனக்கான வேலையை சரியாக செய்துள்ளனர். ஷங்கரின் ட்ரேட்மார்க் கொண்ட திடமான அரசியல் கலந்த கமர்ஷியல் படம் என்று விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply