Gangers Movie Review: கேங்கர்ஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம்
நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் சுந்தர் சி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் கேங்கர்ஸ். இப்படம் எப்படி இருக்கு என்ற விமர்சனத்தை(Gangers Movie Review) தற்போது இந்தத் தொகுப்பில் காணலாம்.
கேங்கர்ஸ் படத்தில் சுந்தர் சி உடன் இணைந்து வடிவேலு, கேத்தரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த், மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்புலி, ஜான் விஜய் மற்றும் பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. கிட்டத்தட்ட 14 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இயக்குனர் சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் கூட்டணியில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்த இருவரின் முந்தைய கூட்டணியில் வெளியான தலைநகரம் மற்றும் வின்னர் போன்ற படங்களின் நகைச்சுவை, பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் ரசிக்கப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு சுந்தர் சியின் அரண்மனை 4 மற்றும் இந்த ஆண்டு மதகஜராஜா ஆகிய படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த சூழலில்தான் கேங்கர்ஸ் படம் வெளியாகியுள்ளது.
கேங்கர்ஸ் படத்தின் கதை : Gangers Movie Review


அரசன் கோட்டை என்ற ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி காணாமல் போகிறார். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியதால், அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சுஜிதா (கேத்தரின் தெரசா), சிறுமி காணாமல் போனது மற்றும் பள்ளி வளாகத்தில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரின் சிறப்புப் பிரிவில் புகார் அளிக்கிறார். இதைத் தொடர்ந்து, சரவணன் (சுந்தர் சி) பள்ளியில் புதிய உடற்கல்வி ஆசிரியராக இணைகிறார். இவருடன் மற்றொரு உடற்கல்வி ஆசிரியரான சிங்காரமும் (வடிவேல்) நட்புக் கூட்டணி இணைகிறது. காணாமல் போன சிறுமியின் இருப்பிடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? உண்மையில் சரவணன் யார்? எந்த வகையான உள்ளூர் அரசியல்வாதிகள் பள்ளியை சட்டவிரோதமாகப் பயன்படுத்துகிறார்கள் போன்ற பல கேள்விகளுக்கு இந்தக் கதை பதிலளிக்கிறது.
திரை விமர்சனம் : Gangers Movie Review
வழக்கமாக, சுந்தர்.சியின் திரைக்கதைகளில் காணப்படும் லாஜிக் ஓட்டைகள் மற்றும் மீறல்கள் அவரது வண்ணமயமான மேக்கிங் மற்றும் திடீர் திருப்பங்களால் மறந்துவிடும். இந்த படத்தில் அவை கறைபடிந்திருந்தாலும், வடிவேலுவின் நகைச்சுவை பாணியும், அது கதைக்களத்துடன் சரியாக இணைந்த விதமும் தியேட்டரை சிரிப்பால் அதிர வைக்கிறது. சுந்தர்.சியின் மனைவியாக நடிக்கும் வாணி போஜன், ஒரு சில காட்சிகளில் வந்தாலும் நிறைவாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்த ராஜசேகர் சிறப்பாகச் செய்துள்ளார். கலை இயக்குனர் குருராஜ் தனது குழுவினரின் அனைத்து முயற்சிகளையும் லாக்கர் காட்சிகளில் செலுத்தியுள்ளார். சி. சத்யாவின் இசை பரவாயில்லை. இந்த கேங்கர்ஸ் குழுவினர் , நீங்கள் லாஜிக் பற்றி யோசிக்காமல் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு விருந்தை உருவாக்கியுள்ளனர்.
Latest Slideshows
-
Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
-
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
-
Ku.Azhagirisaami Kadhaigal : கு.அழகிரிசாமி கதைகள்
-
Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
-
Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்
-
Butterfly Life Cycle : பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவல்கள்
-
Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு