Ganguly Request : இந்தியாவின் மைதானங்களை மாற்றி அமைக்க வேண்டும்

விசாகப்பட்டினம் :

கடந்த 7 ஆண்டுகளில் சொந்த மண்ணில் இந்திய வீரர்களின் பேட்டிங் தரம் குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விமர்சித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யாஷ்வி ஜெய்ஸ்வால் 7 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகள் உட்பட 209 ரன்கள் குவித்தார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் 35 ரன்கள் கூட எடுக்கவில்லை. இது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் பட்டிதார் ஆகியோர் சிறப்பான தொடக்கம் தந்தாலும் சில மோசமான ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்தனர். அதேபோல கே.எஸ்.பாரத் விளையாடி மோசமாக அவுட்டாகியுள்ளார். யாஷ்வி ஜெய்ஸ்வால் அடித்த ரன்களைக் கழித்தால் மற்ற இந்திய வீரர்களின் ஸ்கோர் வெறும் 187 ரன்களே.

Ganguly Request :

இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான இந்த ஆட்டத்திற்கு மைதானங்களே காரணம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், பும்ரா, ஷமி, சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் பந்துவீசுவதை பார்க்கும் போது, ​​இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்களை ஏன் தயாரிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இது சிறந்த ஆடுகளங்களில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எனது எண்ணத்தில் எனக்கு நம்பிக்கையை அளிக்கிறது. அஷ்வின், ஜடேஜா, அக்சர், குல்தீப் யாதவ் ஆகியோரின் உதவியால் எந்த ஆடுகளத்திலும் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும். ஆனால், சொந்த மண்ணில் இந்திய வீரர்களின் பேட்டிங் தரம் கடந்த 7 ஆண்டுகளாக சரிந்து வருகிறது.

இதனால் சிறந்த ஆடுகளங்கள் (Ganguly Request) தேவைப்படுகின்றன. போட்டிகளை 5 நாட்கள் நடத்தினாலும் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறலாம் என பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்காக சிறப்பு ஆடுகளம் மற்றும் மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, டெஸ்ட் ஆடுகளங்கள் மற்றும் மைதானங்கள் இந்தியாவில் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட வேண்டும் என்பது கங்குலியின் (Ganguly Request) நீண்ட நாள் கோரிக்கையாகும்.

Latest Slideshows

Leave a Reply