Gavaskar Questions RCB : இந்த அணியை வைத்து எப்படி கோப்பையை வெல்ல முடியும்?

பெங்களூரு :

RCB-யின் பந்துவீச்சு மிகவும் மோசமாக உள்ளது என்றும், 2 நட்சத்திர வீரர்களை அவர்கள் கைவிட்டிருக்கக் கூடாது என்றும் சுனில் கவாஸ்கர் (Gavaskar Questions RCB) தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணை இன்னும் சில வாரங்களில் வெளியாகும், மார்ச் 22 முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இப்போதே, பல்வேறு அணி நிர்வாகங்கள் பயிற்சி முகாமைத் திட்டமிடத் தொடங்கியுள்ளன.

அதேபோல், முன்னாள் வீரர்களுக்கு இடையேயான விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் 16 ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரில் கோப்பையை வெல்வதை தவிர்த்து வந்த ஆர்சிபி அணி, இம்முறை புதிய பயிற்சியாளருடன் களம் இறங்கியுள்ளது. அதேபோல் ஐ.பி.எல் ஏலத்தில் நட்சத்திர வீரர்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டாமல் மைதான சூழல் மற்றும் ஆடுகளத்திற்கு ஏற்ப சில நல்ல பந்து வீச்சாளர்களை வாங்கியுள்ளது. இருப்பினும், ஆர்.சி.பியின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்.

Gavaskar Questions RCB :

ஆர்.சி.பி அணி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது, இந்த சீசனில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சு பரிதாபமான நிலையில் உள்ளது. ஹேசல்வுட் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதால் அவரை விடுவிப்பதில் தவறில்லை. ஆனால் ஹர்சல் படேல் மற்றும் ஹசரங்கா இருவரையும் விடுவிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பவர் பிளே, மிடில் ஓவர், டெத் ஓவர் என போட்டியின் எல்லா நேரங்களிலும் அவர்களால் பந்து வீச முடியும். அதற்கான அனுபவம் அவர்களிடம் உள்ளது. ஆனால் இரு வீரர்களையும் விட்டுவிட்டு பெர்குசனையும், அல்ஜாரி ஜோசப்பையும் வாங்கினார்கள். ஐ.பி.எல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை அல்சாரி ஜோசப் பெற்றுள்ளார்.

Gavaskar Questions RCB : ஆனால் இவர்கள் இருவரும் சின்னசாமி மைதானத்தில் எப்படி பந்து வீசுவார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. எனவே ஆர்சிபி அணியின் பந்துவீச்சு மோசமாக உள்ளது. ஸ்பின்னர்களை அதிக அளவில் வாங்கவில்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில், மேற்கிந்திய தீவு வீரர் ஷமர் ஜோசப்பை வாங்க ஆர்சிபி பேரம் பேசி வருவதாக ஆர்சிபி அணியின் முன்னாள் ஆய்வாளர் பிரசன்னா தெரிவித்துள்ளார். இதேபோல் இங்கிலாந்து வீரர் டாம் குரனும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஒருவேளை ஷமர் ஜோசப் ஒப்பந்தம் செய்யப்பட்ட சூழலில், ஆர்சிபியின் பந்துவீச்சு கொஞ்சம் வலுவடையும்.

Latest Slideshows

Leave a Reply