GCC Generates 665 Tonnes Bio CNG in Chetpet

Greater Chennai Corporation (GCC) ஆனது தனது சேட்பேட் ( Chetpet ) ஆலையில்  சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மொத்தம் 36,726 டன் ஈரக் கழிவுகள் பயன்படுத்தி  665 டன் உயிர் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ( Bio – CNG ) உருவாக்கியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு Greater Chennai Corporation ( GCC ) ஆனது Srinivas waste management solutions pvt limited உடன் இணைந்து Chetpet-ல்  Bio – CNG (அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு) ஆலை தொடங்கி  உள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து சுமார் 100 டன் காய்கறி கழிவுகள்  மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹோட்டல்களின் உணவுக் கழிவுகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்டு Bio – CNG ஜியாக மாற்றப்படுகின்றன.

சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுங்கையூர் அருகே   ( மாதவரம் மண்டலம் )  இரண்டாவது 100 – டன் திறன் கொண்ட  Bio – CNG ஆலையை திறந்து வைத்தார். இந்த ஆலையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஈரமான சமையலறைக் கழிவுகள் மாட்டுச் சாணத்துடன் கலந்து  Bio – CNG ஆனது உற்பத்தி செய்யப்படுகிறது.

சென்னை நகரின் மழைநீர் வடிகால்களில் முன்னதாக கொட்டப்பட்ட சுமார் 10-12 டன் மாட்டுச் சாணம் இப்போது  Bio – CNG ஆலை மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக செயலாக்கப்படுகிறது.

மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பொது-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் இயக்கப்படும் இந்த ஆலையில்    ஒவ்வொரு நாளும்  சுமார் 100 டன் கழிவுகள் Bio – CNGயை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன, இந்த  Bio – CNG சிலிண்டர்களில் சுருக்கப்பட்டு பல்வேறு ஹோட்டல்களுக்கு விற்கப்படுகிறது” Chetpet  ஆலையில் இருந்து தினமும் சுமார் 400 கிலோ Bio – CNGஜியை ஆச்சி மசாலா வாங்குகிறது. இந்த புதுப்பிக்கத்தக்க  Bio – CNG ஆற்றல் மூலமானது, Gas Authority Of India Limited (GAIL) மற்றும் பல்வேறு ஹோட்டல்களுக்கு விற்கப்படுகிறது.

சரவண பவன் சென்னையில் உள்ள தனது 22 கிளைகளில் 2-டில் LPGக்கு பதிலாக CNGயை வழங்கியுள்ளது. தினமும் சுமார் 1.5 டன் கழிவுகள் சரவண பவனின் ஒன்பது முக்கிய கிளைகளில் இருந்து சேகரிக்கப்பட்டு Bio – CNG ஆக மாற்றப்படுகிறது.

Bio - CNGஜின் நன்மைகள்

 Bio – CNGஜி மூலம் எரிவாயு வீணாவதை தவிர்க்கலாம் என்கின்றனர் நுகர்வோர்.

 • சென்னையில் உள்ள சில உணவக சங்கிலிகள், LPG சிலிண்டரிலிருந்து Bio – CNGக்கு மாற்றிய பிறகு, எரிபொருள் செலவைக் குறைத்துள்ளன.
 • ஆச்சி மசாலாவின் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தலைவர் ராஜன் ஜேஜேஎம் “முழு சுடரைப் பயன்படுத்தி LPGயில் சமைக்கும்போது, ​​எரிவாயு வீணாகிறது. ஆனால் முழுச் சுடரிலும் கூட, CNGயின் சுடர் சமநிலையில் இருப்பது எரிவாயு வீணாவதை தடுக்கிறது ,” என்கிறார்.

Bio – CNGஜியைப் பயன்படுத்துவது சமையலறை சூழலையும் தாங்கக்கூடியதாக ஆக்குகிறது.

 • உணவக சமையலறைகளில் பல அடுப்புகள் ஒரே நேரத்தில் செயல்படும்போது, அதிக வெப்பநிலையைத் தாங்குவது சமையல்காரர்களுக்கு ஒரு தொழில் அபாயமாகிறது. ஆச்சி மசாலாவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி “  Bio – CNGஜியுடன், சமையல் அறைகள், LPGகளைப் போல வெப்பமடையாததை பருப்புகளை வறுக்க நிற்கும்போது உணரமுடிகிறது ”என்கிறார்.

சாதகமான விலை

 • “ஒரு கிலோ LPG வர்த்தக சிலிண்டர் சுமார் Rs. 104, ஆனால் ஒரு கிலோ Bio – CNG Rs. 74 (பிப்ரவரி 23 நிலவரப்படி).  சரவண பவன் பகுதி மேலாளர் பி லோகநாதன், “  Bio – CNG கு மாறிய பிறகு மொத்த செலவில் 30% வரை சேமிக்கிறோம்,” என்று கூறினார்.
 • LPGக்கு 18% GST வரி விதிக்கப்பட்டாலும், Bio – CNG, தூய்மையான ஆற்றலுக்கு 5% GST வரி உள்ளது. பசுமை ஆற்றலை உற்பத்தி செய்ய Bio – CNG ஆலைகள் உதவும்

GCC யின் - Bio-CNG வருங்கால திட்டங்கள்

 • சென்னை மாநகரில் மாநகராட்சி திடக்கழிவுகளை 100% பதப்படுத்துவதற்கான பல திட்டங்களைத் தொடங்க பெரு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
 • தற்போது 5,200 டன் திடக்கழிவுகள் ​​பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் சேருகின்றன. மற்றொரு திட்டமான பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருள் ஆக மாற்றும்  திட்டத்திற்கு விரைவில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
 • HPCL போன்ற பொதுத்துறை எரிவாயு ஏஜென்சிகளுடன் Bio – CNGயை சந்தைப்படுத்துவதற்காக, வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் என்று கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
 • தற்போதுள்ள 5 ஆலைகள் 500 டன் கழிவுகளை செயலாக்கும், மேலும் புதிய ஆலைகள் மூலம் தினசரி 1,000 டன்களை செயலாக்க முடியும். ( 100-டன் செயலாக்க திறன் கொண்ட கோயம்பேடு மற்றும் சோழிங்கநல்லூரில் (சென்னை) உள்ள CNG ஆலைகள். )
 • தலா 2 உயர் திறன் கொண்ட பயோ சிஎன்ஜி ஆலைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு ஆலை மாதவரத்தில்திறக்கப்பட்டு சில இயந்திரங்களின் வரவுக்காக காத்திருப்பதால் இன்னும் செயல்படவில்லை. GCC ஆல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Tender விடப்பட்ட இதுபோன்ற மேலும் ஐந்து ஆலைகள் நிறுவப்படுவதற்கு இன்னும் அதிக காலம் எடுக்கும். சென்னை சேத்துப்பட்டில் உள்ள Bio – CNG  ஆலை கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.

Latest Slideshows

Leave a Reply