GCC Water Monitoring : குடிநீர் சப்ளையை சரி செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை

GCC Water Monitoring :

இந்தியாவில் முக்கிய பெருநகரங்களுள் சென்னைக்கு முக்கிய இடம் இருக்கிறது. சென்னை ஆனது IT  மற்றும் Automobile உள்ளிட்ட துறைகளில் முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் முக்கிய நகரமான சென்னையில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் சென்னைக்கு வருகிறார்கள். இதனால் சென்னை தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கிறது மற்றும் மக்கள் தொகை ஆனது அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடுமையாகிறது. அதில் முக்கியமானது சுத்தமான குடிநீர் சப்ளை செய்வது ஆகும். அனைத்து வீடுகளுக்கும் சென்னையில் குடிநீர் மூலம் தண்ணீர் சப்ளை செய்வது என்பது  இன்னும் நடக்காத ஒன்றாகவே இருக்கிறது.

தலைநகர் சென்னையில் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், குடிநீர் சப்ளை  ஏற்கனவே இருக்கும் பகுதிகளிலும் கூட முறையாகக் குடிநீர் சப்ளை தரப் பல சிக்கல்கள் இருக்கிறது. சென்னை மாநகராட்சி அந்த சிக்கல்களைச் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்முறையாகச் சென்னையின் கழிவுநீர் அமைப்புகளில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சியாகச் சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆனது அதிநவீன எண்டோபோட் கேமராக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. சென்னை மக்கள் நல்ல குடிநீரை பெறுவதை இது உறுதி செய்யும்.

சென்னையில் நகர் முழுக்க மாநகராட்சி பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆனது 91 லட்சம் இணைப்புகளுக்கு 1,000 எம்.எல்.டி தண்ணீரை வழங்கி வருகிறது. அதேநேரம் சென்னை மாநகராட்சி ஆனது தனது பைப் லைன்களை அப்கிரேட் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் காரணமாக பழைய பைப்லைன்கள் ஆனது பழுதாகி வருவதாக அடிக்கடி புகார்கள் வந்துள்ளன. சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆனது இந்த பிரச்சனையைச் சரி செய்யவும் பைப்லைனில் இருக்கும் சிக்கல்களை அடையாளம் காணவும் எண்டோபோட் கேமராக்களைப் (GCC Water Monitoring) பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர், இதன் முதற்கட்டமாக வளசரவாக்கத்தில் ஆய்வு செய்தபோது அதில் எச்டிபிஇ குழாய்கள் ஆனது அதிகளவில் சேதமடைந்து இருப்பதைக் கண்டறிந்ததாகவும், எனவே இந்த எச்டிபிஇ குழாய்களுக்குப் பதிலாக டிஐ குழாய்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், நகர் முழுக்க நீர் எடுத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலைத் தீர்க்க ஒரு விரிவான திட்டத்தை (GCC Water Monitoring) வகுத்துள்ளதாகவும் கூறினார். மேலும், ஆய்வுகள் நடத்தி குழாய்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் கசிவுகளைக் கண்டறிய எண்டோபோட் கேமராக்களைப் பயன்படுத்தப் அதிகாரிகள் பரிந்துரைத்தனர் என்றும் அவர் கூறினார். குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மூலம் உடனுக்கு உடன் அடையாளம் கண்டு சரி செய்ய முடியும். சென்னையில் தங்கு தடையில்லாமல் குடிநீர் சப்ளை இருப்பதை இது உறுதி செய்யும்.

சென்னை தலைநகரில் குடிநீர் சப்ளை என்பது பெரிய பிரச்சனையாகவே இருந்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சீரான குடிநீர் சப்ளை இருப்பதை உறுதிசெய்ய முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. கழிவுநீர் வாரியம் அதிநவீன எண்டோபோட் கேமராக்களை பயன்படுத்த முடிவு (GCC Water Monitoring) செய்துள்ளது. சென்னை  மட்டுமல்லாமல் நமது நாட்டில் அனைத்து பெருநகரங்களும் சீரான குடிநீர் சப்ளை செய்வது என்பது சிக்கலாக இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply