General Civil Bill : இந்திய நாட்டின் உத்தரகாண்ட்டில் முதல் முறையாக பொது சிவில் சட்டம் அமல்

General Civil Bill introduced in Uttarakhand Assembly :

இந்தியாவிலேயே முதல் முறையாக 05/02/2024 அன்று உத்தராகண்ட் மாநில சட்டசபையில் பொதுசிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தராகண்ட் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பொதுசிவில் சட்டத்திற்கு அவரது ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நாட்டில் முதன் முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப்பட்டது. இந்த பொதுசிவில் சட்டத்தில் திருமணம், சொத்து உள்ளிட்டவை தொடர்பாக மதங்களுக்கு ஏற்ப மக்கள் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த சட்டங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு ஒரு பொதுவான சட்டம் ஆனது கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது, உத்தராகண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து சாதி, இனம் மற்றும் மதத்தினருக்கும் இந்த சட்டம் ஆனது பொருந்தும். ஆனால், இந்த மசோதா பழங்குடியின மக்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளது. இந்த பொது சிவில் சட்டம் ஆனது திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, மற்றும் லிவ்-இன் உறவுகள் ஆகியவைற்றை குறித்த வரையறைகளை கொண்டிருக்கிறது. இந்த வரையறைகள்தான் இந்த சட்டத்தின் மீதான விமர்சனங்களுக்கு காரணமாகவும் இருக்கிறது. இந்த பொதுசிவில் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இது நிறைவேற்றப்பட்டது. சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு பொதுசிவில் சட்டம் ஆனது தாக்கல் செய்யப்பட்டது.

பொது சிவில் சட்ட வரையறைகள் : General Civil Bill

இந்த பொது சிவில் சட்டம் ஆனது திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, மற்றும் லிவ்-இன் உறவுகள் ஆகியவைற்றை குறித்த வரையறைகளை கொண்டிருக்கிறது. இந்த வரையறைகள்தான் இந்த சட்டத்தின் மீதான விமர்சனங்களுக்கு காரணமாகவும் இருக்கிறது. லிவ்-இன் உறவுகளில் திருமணமானவர்கள் இருக்க தடை செய்யப்பட்டிருக்கிறது. லிவ்-இன் உறவில் 21 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இருக்க விரும்பினால் அது குறித்து பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும். லிவ்-இன் உறவுகளில் இருப்பவர்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தாலும் சரி, மற்றும் மாநில அரசு ஊழியராக இருந்தாலும் சரி. சட்டத்தின்படி, லிவ்-இன் உறவு குறித்து அவர்கள் மாவட்டப் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். பொதுசிவில் சட்டத்தில் யார் யாரை திருமணம் செய்யக்கூடாது என்ற பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 

  1. அம்மா
  2. தந்தையின் விதவை மனைவி
  3. தாயின் தாய்
  4. தாய் வழி தாத்தாவின் விதவை மனைவி
  5. தாய் வழி பாட்டியின் தாய். (கொள்ளுப் பாட்டி)
  6. தாய் வழி பாட்டியின் தந்தை விதவை மனைவி
  7. தாய் வழி தாத்தாவின் தாய்
  8. தாய் வழி தாத்தாவின் தந்தையின் விதவை மனைவி
  9. தந்தையின் தாய்
  10. தந்தை வழி தாத்தாவின் விதவை மனைவி
  11. தந்தை வழி பாட்டியின் தாய்
  12. தந்தை வழி பாட்டியின் தந்தையின் விதவை மனைவி
  13. தந்தை வழி தாத்தாவின் தாய்
  14. தந்தை வழி தாத்தாவின் தந்தையின் விதவை மனைவி
  15. மகள்
  16. மகனின் கணவன்
  17. மகள் வழி பேத்தி
  18. மகள் வழி பேரனின் மகனின் விதவை மனைவி
  19. மகன் வழி பேத்தி
  20. மகன் வழி பேரனின் விதவை மனைவி
  21. மகள் வழி பேத்தியின் மகள்
  22. மகள் வழி பேத்தி மகனின் விதவை மனைவி
  23. மகன் வழி பேரனி மகள்
  24. மகள் வழி பேரனின் மகனின் விதவை மனைவி
  25. மகன் வழி பேத்தியின் மகள்
  26. மகன் வழி பேத்தியின் மகனின் விதவை மனைவி
  27. மகன் வழி பேரனின் மகள்
  28. மகன் வழி பேரன் மகனின் விதவை மனைவி
  29. சகோதரி
  30. சகோதரியின் மகள்
  31. சகோதரனின் மகள்
  32. தாயின் சகோதரி
  33. தந்தையின் சகோதரி
  34. தந்தையின் சகோதரனின் மகள்
  35. தந்தையின் சகோதரியின் மகள்
  36. தாயின் சகோதரியின் மகள்
  37. தாயின் சகோதரனின் மகள்

போன்ற உறவு முறைகளை திருமணம் செய்ய தடை” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Latest Slideshows

Leave a Reply