Get PAN No By Using Aadhaar Details : சில நிமிடங்களில் Aadhaar விவரங்களைப் பயன்படுத்தி PAN No பெறலாம்
தற்போது இந்தியா முழுவதும் வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆனது பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆனது மக்களுக்கு மிக முக்கிய அடையாள அட்டைகளாகும். ஆதார் அடையாள அட்டை எப்படி ஒரு தனி நபரின் அடையாளங்களை உறுதிப்படக் காண்பிக்க ஒரு முக்கிய ஆவணமாகச் செயல்படுகிறதோ, அதேபோல் பான் கார்டு ஆனது ஒரு தனி நபர் தொடர்பான நிதி அடையாளங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இந்த PAN கார்டு ஆனது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய வருமான வரித்துறை ஆனது நிரந்தர கணக்கு எண்ணை PAN கார்டு என்ற பெயரில் எல்லோருக்கும் வழங்கி வருகின்றது.
மக்களுடைய அனைத்து வங்கி, பண பரிவர்த்தனைகளை கணக்கில் எடுக்க மற்றும் கண்காணிக்க இந்த பான் எண் ஆனது அவசியம் ஆகும். எப்போதும் போல அசல் பான் கார்டைப் பெறுவது என்பது ஒரு அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல் ஆகும். ஆனால் e-பான் கார்டைப் பெறுவது என்பது மிக எளிதான செயல் ஆகும். ஏனெனில் e-பான் கார்டுகள் இப்போது எலக்ட்ரானிக் முறையில் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்த இ-பான் வசதியானது, ஆதார் எண்ணைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக சில நிமிடங்களில் பான் கார்டுகளை பெற அனுமதிக்கிறது.
Get PAN No By Using Aadhaar Details - ஆன்லைனில் Aadhaar-ரை பயன்படுத்தி PAN கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை :
- E-filing portal homepage பக்கத்திற்குச் சென்று, instant e-பான் என்பதை click செய்ய வேண்டும்.
- E-பான் page-ல் உள்ள get new e-பான் என்பதை click செய்ய வேண்டும்.
- மக்கள் தங்களது 12 இலக்க ஆதார் எண்ணை Get new e-பான் பக்கத்தில் enter செய்ய வேண்டும்.
- அடுத்து confirm மற்றும் continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து, “நான் ஒப்புதல் விதிமுறைகளைப் படித்துவிட்டேன், மேலும் தொடர ஒப்புக்கொள்கிறேன்” என்பதை OTP சரிபார்ப்பு பக்கத்தில் மக்கள் click செய்ய வேண்டும்.
- அடுத்து “Continue” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பின் OTP சரிபார்ப்பு பக்கத்தில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP-ஐ enter செய்ய வேண்டும்.
- UIDAI உடன் ஆதார் விவரங்களை சரிபார்க்கவும் என்பதை தேர்ந்தெடுத்து, Continue என்பதைக் click செய்ய வேண்டும்.
- ஆதார் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அதன் பின் பக்கத்தில், I Accept என்பதைக் கிளிக் செய்து, Continue என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு தோன்றும் அக்னாலெட்ஜ்மென்ட் நம்பருடன் கூடிய சக்ஸஸ்புல் மெசேஜ் ஐடியை மக்கள் எதிர்கால தேவைக்காக வைத்திருக்க வேண்டும். அதன் பின், ஆதாருடன் இணைக்கப்பட்ட மக்களின் மொபைல் எண்ணுக்கு கன்ஃபர்மேஷன் மெசேஜ் பெறப்படும். இதனைத் தொடர்ந்து மக்கள் “டவுன்லோட் e-பான்” என்பதைக் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். இந்த e-பான் ஆனது எந்த கட்டணமும் இல்லாமல் PDF வடிவத்தில் விண்ணப்பதார மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த e-பான் ஆனது டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பான் கார்டு ஆகும் (ஆதாரின் e-KYC டேட்டாவின் அடிப்படையில்).
Advantages Of இ-பான் :
- இது ஒரு எளிதான மற்றும் paperless செயல்முறை ஆகும்.
- இந்த e-பான்கள் ஆனது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்.
- இந்த e-பான்கள் ஆனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, நிதி பரிவர்த்தனைகளை நடத்த மற்றும் KYC தேவைகளை பூர்த்தி செய்ய என பான் கார்டு தேவைப்படும் அனைத்து இடங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படும்.
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்