Ghee Benefits : தினமும் நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இந்தியாவின் பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதத்தின் படி, காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் (Ghee Benefits) நல்லது. முக்கியமாக இது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளிக்கிறது. நெய் உணவுக்கு நல்ல சுவையையும் மணத்தையும் கொடுத்தாலும், அதில் கொழுப்புச் சத்தும் உள்ளது. அதுவும் நெய்யில் 62% சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது. மேலும் நெய்யில் ஒமேகா-3, ஒமேகா-6 மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.

இத்தகைய நெய்யை தினமும் உணவுடன் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும், காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிடுவது இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க உதவுகிறது. குறிப்பாக இதில் உள்ள பியூட்ரிக் அமிலம் மற்றும் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் உடலில் உள்ள கடினமான கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற உதவுகிறது. ஆனால் நெய் எவ்வளவு நன்மைகள் நிறைந்ததோ, அது ஆரோக்கியத்திற்கு கேடு. எனவே எல்லாவற்றையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் நெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் (Ghee Benefits) என்பதை இப்போது பார்க்கலாம்.

Ghee Benefits - நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பொலிவான சருமம்

நெய் ஒரு இயற்கை மாய்ஸ்சுரைசர். இந்த நெய்யை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்வதால், அது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. மேலும் இது சருமத்தை ஈரப்பதமாக்கி, சருமத்தில் உள்ள முகப்பரு மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. சிறந்த பலன் கிடைக்க, காலையில் எழுந்தவுடன் ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிட்டு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும்.

இரத்த ஓட்டம் சீராக

தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிட்டு வந்தால் தமனிகள், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் தடிமனாவதை தடுக்கிறது மற்றும் இரத்த ஓட்டம் மேம்படுத்துகிறது. மேலும் இது ப்ரீ ரேடிக்கல்களால் உடலில் உள்ள செல்கள் சேதமடைவதையும் தடுக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் குறைய

வீட்டில் தயாரிக்கப்படும் நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. இது உடலை நச்சு நீக்கம் செய்கிறது. நெய் சாப்பிடுவதால் பல நாள்பட்ட நோய்களை தீர்க்கவும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

எலும்பு மூட்டுகளுக்கு நல்லது

நெய் இயற்கையாகவே மூட்டுகளை வலிமைப்படுத்துகிறது. இது கால்சியம் உறிஞ்சுதலையும் அதிகரிக்கிறது. நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கிறது மற்றும் மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது. கீல்வாதம் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் அன்றாட உணவில் நெய்யை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். காலையில் எழுந்ததும் தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வருவது (Ghee Benefits) நல்லது.

மூளை ஆரோக்கியத்திற்கு

நல்ல கொழுப்புகள் மூளை செல் ஆரோக்கியத்திற்கும், சரியான செயல்பாட்டிற்கும் அவசியம். நெய்யில் இந்த நல்ல கொழுப்புகள் உள்ளன. இதில் புரதமும் உள்ளது. இது நரம்பியக்கடத்திகளின் இனப்பெருக்கத்தைத் தூண்டுகிறது. இது நரம்பு முடிவுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே உங்கள் மூளை ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிடுங்கள்.

ஆரோக்கியமான முடி வளர

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிட்டு வந்தால் தலைமுடிக்கு நல்ல பொலிவு கிடைக்கும். இது மயிர்க்கால்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. முக்கியமாக பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மலச்சிக்கலுக்கு நல்லது

நெய் வயிற்றில் அமிலச் சுரப்பைத் தூண்டி சமநிலைப்படுத்துகிறது. இது இயற்கையான லூப்ரிகண்டாக செயல்படுவதால், செரிமான மண்டலத்தை சரிசெய்து, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. குடலுக்கு ஆற்றலைக் கொடுப்பதன் மூலம் மலம் சீராக வெளியேறும். தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். நெய்யில் பியூட்ரிக் அமிலம் உள்ளது. நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க இது மிகவும் உதவுகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை (Ghee Benefits) கொண்ட நெய்யை தினமும் சாப்பிட்டு நன்மை பெறுங்கள்.

Latest Slideshows

Leave a Reply