Ghost Movie Trailer - மிரட்டலாக வெளியானது சிவராஜ்குமாரின் 'கோஸ்ட்' டிரைலர்

Ghost Movie Trailer

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் கோஸ்ட் படத்தின் டிரைலர் (Ghost Movie Trailer) வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் கேங்ஸ்டர் படமாக எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தசரா பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அனுபம் கெர், சத்ய பிரகாஷ் மற்றும் தடான்னா, ஜெயராம், பிரசாந்த் நாராயண், அர்ச்சனா ஜோயிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் கேங்ஸ்டராக களமிறங்கி பட்டையை கிளப்பி இருந்தார். இந்தப் படத்தில் அவர் இரண்டு காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், அந்த இரண்டு காட்சிகளிலும் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கைதட்டலைப் பெற்றார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். உபேந்திரா, அர்ஜுன் ஜன்யாவின் 45, ராம் துலிப்புடி, பைரதி ரணங்கள், IV ரிட்டர்ன்ஸ் முதலிய படங்களை கையில் வைத்திருக்கும் இவர் கோட்ரேஷ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் பெயரிடப்படாத படத்திற்கும் இவர் இணைந்துள்ளார். மேலும், தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் சந்தேஷ் நாகராஜ் தயாரிப்பில் கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம் தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், படத்தின் டிரைலரை (Ghost Movie Trailer ) படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலரில், யுத்தம் மனிதகுலத்தின் ஆறாத பல காயங்களை ஏற்படுத்தும், மேலும் இந்த வகையான யுத்தங்களால் பல சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டுச்சோ இல்லையோ. அவை நிச்சயமாக அழிந்து போய் இருக்கு. பல சாம்ராஜ்யங்களை உருவாக்கிய சக்கரவர்த்திகளை வரலாறு மறந்துவிட்டது. ஆனால், அழிவைக் கொண்டுவரும் என்னைப் போன்றவர்களை ஒருபோதும் மறக்காது என்று டிரைலர் (Ghost Movie Trailer ) மிரட்டுகிறது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், பிரமாண்டமான பஞ்ச் வசனங்களுடன் அசத்தலான காட்சிகள் என நிரம்பியிருக்கும் இந்த டிரைலரின் முடிவில் இளமையாக தோன்றி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். டிரைலரைப் பார்த்த ரசிகர்கள், KGF படத்தைப் போலவே இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply