Gift Deed - பரிசுப் பத்திரங்கள்

Gift Deed :

இந்தியாவில் சுமார் 15% பரிசுப் பத்திரப்பதிவுகள் ஆனது நடைபெறுகிறது. ஒருவர் முற்றிலும் இலவசமாக ஒரு சொத்தை மற்றொருவருக்கு அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பத்திரம் பரிசுப் பத்திரம் (Gift Deed) ஆகும். இது ஒரு கையொப்பமிடப்பட்ட சட்டப்பூர்வ ஆவணமாகும். ஒரு சொத்தை எந்தவொரு பணப் பரிசீலனையும் இல்லாமல் ஒரு தனிநபர், மற்றொரு நபர் அல்லது நிறுவனத்திற்கு அன்பளிப்பாக மாற்றுவதற்கு இந்த பரிசுப் பத்திரம் ஆனது உதவுகிறது. இந்த பரிசுப் பத்திரம் பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களுக்கு இடையே அன்பளிப்பாக சொத்து பரிமாற்றம் செய்வதற்கு மற்றும் தொண்டு நோக்கம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படுகிறது.

ஒரு முறை இந்த Gift Deed நிறைவேற்றப்பட்ட பின்பு அதைத் திரும்பப் பெற முடியாது. தனக்குள்ள சொத்தை ஒருவர் வேறு ஒருவருக்கு எழுதிக் கொடுத்த நிமிடத்தில் இருந்து அந்த சொத்தில் அவருக்கு இருந்து வந்த உரிமை முடிவுக்கு வந்து விடும். அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை பின்னாளில் ரத்து செய்ய சட்டப்படி அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதனால், “நான்தான் என் சொத்தை அப்போது தானமாக கொடுத்தேன், இப்போது எனக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால், அதை ரத்து செய்யப் போகிறேன்” என்று யாரும் கூற முடியாது. எப்படி ஒருவர் தான் விற்ற சொத்தை திரும்ப பெற முடியாதோ, அதேபோலத்தான், ஒருவர் தானம் கொடுத்த சொத்தையும் திரும்ப பெற முடியாது. பதிவு செய்த உடனேயே அந்த சொத்தானது அதனை எழுதிக் கொடுக்கப்பட்டவருக்குச் சொந்தமாகிவிடும்.

ஒருவர் தனக்கு மட்டும் சொந்தமான சுய சம்பாத்திய சொத்தை அல்லது தனக்கு  மட்டுமே சொந்தமான தனிப்பட்ட சொத்தை Gift Deed செய்ய முடியும். பூர்வீக சொத்தை பரிசுப் பத்திரம் செய்ய முடியாது. அப்படி பரிசுப் பத்திரம் செய்தால் அது செல்லாது. மேலும் அது மற்ற வாரிசுகள் வழக்குத் தொடுக்க வாய்ப்பளிக்கும். பரிசுப் பத்திர பதிவுக்காக வாங்கப்படும் பத்திரமானது பரிசு சொத்தின் அரசு மதிப்பீட்டு தொகையில் 1% அல்லது அதிகபட்சமாக ரூ.25,000 மதிப்பீட்டில் இருக்க வேண்டும். பரிசாக அளிக்கப்படும் சொத்தின் மதிப்பைப் பொறுத்து, பரிசுப் பத்திரத்தின் முத்திரைக் கட்டணம் மற்றும் பரிசு வரி போன்ற வரிகள் ஆனது கணக்கிடப்படும். சொத்தின் மதிப்பின் அடிப்படையில் செலுத்த வேண்டிய முத்திரை வரியின் மதிப்பு ஆனது மாறுபடும். இந்த பரிசுப் பத்திரம் ஆனது சொத்து உரிமைகளை சுமூகமாக மற்றும் சட்டப்பூர்வமாக மாற்றுவதை உறுதி செய்கின்றது.

Latest Slideshows

Leave a Reply