Gift Movie First Look : 'கிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Gift Movie First Look :
தென்னிந்தியத் திரையுலகில் ஒரு சில இயக்குனர்கள் திறமையால் கவனத்தை ஈர்த்து விடுவார்கள். அந்த வகையில் தொழில்நுட்பம் மற்றும் திரை மொழி என எந்த ஒரு அடிப்படையானாலும் கவனத்தை ஈர்க்கும் அற்புதமான இயக்குனர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரனும். தற்போது அவர் இயக்கத்தில் ‘கிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ (Gift Movie First Look) வெளியாகியுள்ளது.
‘நேரம்’, ‘பிரேமம்’, ‘கோல்டு’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குனராக அல்போன்ஸ் புத்திரன் திகழ்ந்தார். நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் ‘பிரேமம்’. அதன் வெற்றி இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் தென்னிந்திய சினிமாவின் முன்னணியில் வலம் வருவதற்கான வாய்ப்பையும் அளித்துள்ளது. இன்றும் இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.
அதைத் தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் – நயன்தாரா நடித்த ‘கோல்டு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘கிஃப்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் தற்போது ரோமியோ பிக்சர்ஸ் பேனரில் நிறுவனத்தின் கீழ் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ‘கிஃப்ட்’ படத்தின் படக்குழுவினர் இசையமைப்பாளர் இளையராஜாவின் பின்னணி இசையுடன் ஃபர்ஸ்ட் லுக் (Gift Movie First Look) இசையை ஒரு தனித்துவமான வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு நடிகர்கள் தேவை என்ற விளம்பரத்தைத் பார்த்ததை தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் படத்தின் ஆடிஷனில் குவிந்தனர். 7 நாட்கள் நடைபெற்ற இந்த தேர்வில் 15 வயது முதல் 55 வயது வரை உள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ‘கோல்டு’ திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றதால், ஒரு தமிழ் படத்தை இயக்கி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நேரடியாக கோலிவுட்டில் இறங்கியுள்ளார். ‘கிஃப்ட்’ திரைப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது. இந்த வருட இறுதியில் ‘கிஃப்ட்’ படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமும் பிரேமம் போன்று ஹிட் ஆகுமா என அல்போன்ஸ் புத்திரனின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Latest Slideshows
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்