Gifted By Luxury Car To The Maharaja Director : மகாராஜா இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த படக்குழு

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் அவரது 50வது படமாக கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளுடன் வெளியான இந்த படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களை கடந்து ஓடி வருகிறது. இப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனுக்கு படக்குழு சார்பாக விலை உயர்ந்த பரிசை (Gifted By Luxury Car To The Maharaja Director) தற்போது கொடுத்துள்ளது.

மகாராஜா :

மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியானது. இப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மகாராஜா படம் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இப்படமானது மகள் மற்றும் தந்தைக்கு இடையே நடக்கும் பிணைப்பை எடுத்து கூறுகிறது. படத்தில் விஜய் சேதுபதியுடன் சச்சனா, அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை மற்றும் காட்சி அமைப்புகள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக நயன்தாராவுடன் இணையுள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த செலவில் உருவான மகாராஜா பெரிய வசூலை கொடுத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் நிதிலன் சுவாமிநாதனுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்துள்ளார். 

Gifted By Luxury Car To The Maharaja Director :

நிதிலன் சுவாமிநாதன், இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளார். அதோடு தயாரிப்பாளர்கள் சுதன், ஜெகதீஷ் மற்றும் விஜய் சேதுபதியுடன் புதிய காரை பரிசாக (Gifted By Luxury Car To The Maharaja Director) பெற்றுக்கொள்ளும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். குரங்கு பொம்மை படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நிதிலன் சுவாமிநாதனுக்கு இரண்டாவது படமாக மகாராஜா அவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து அவரது பயணம் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி மகாராஜா படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் அதிகமானோர் ஓடிடியில் படத்தை பார்த்து வருகின்றனர். மேலும் வெளிநாடு ரசிகர்களும் படத்தை ஓடிடியில் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply