Gill Overtake Kohli : கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

ஜெய்ப்பூர் :

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற புதிய சாதனையை சுப்மன் கில் (Gill Overtake Kohli) படைத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்துள்ளது. சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 48 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 76 ரன்களையும், அணித்தலைவர் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்களையும் பெற்றனர். சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணியின் ரஷித் கான் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து, குஜராத் அணி சார்பில் சாய் சுதர்சன் – சுப்மன் கில் அணி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். சாய் சுதர்சன் நிதானத்தை வெளிப்படுத்தியபோது, ​​சுப்மன் கில் அவேஷ் கான் பந்துவீச்சில் ஒரு சிக்ஸருடன் அதிரடியைத் தொடங்கினார்.

Gill Overtake Kohli :

6வது ஓவரில் சுப்மன் கில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடிக்க, பவர் பிளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணியின் ஸ்கோர் 44 ரன்கள் சேர்த்தது. இந்தப் போட்டியில் 27 ரன்களைக் கடந்தபோது சுப்மன் கில் புதிய மைல்கல்லை (Gill Overtake Kohli) எட்டினார். ஐபிஎல் தொடரில் 3000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். கே.எல்.ராகுலுக்குப் பிறகு வேகமாக 3000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். கே.எல்.ராகுல் 80 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களைக் கடந்த நிலையில், சுப்மன் கில் 94 இன்னிங்ஸ்களில் அதை எட்டினார். ஐபிஎல் வரலாற்றில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை 26 வயது 186 நாட்களில் 3000 ரன்களை கடந்ததே விராட் கோலியின் சாதனையாக இருந்தது. 24 ஆண்டுகள் 215 நாட்களில் விராட் கோலியின் சாதனையை சுப்மன் கில் (Gill Overtake Kohli) முறியடித்துள்ளார். இதன் மூலம் King விராட் கோலியின் சாதனையை Prince சுப்மன் கில் முறியடித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply