Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் பழமைவாய்ந்த கோவில்கள் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் மிகுந்த கலைநயத்துடன் இந்த கோவில்கள் கட்டப்பட்டிருந்தாலும், தற்போது இந்த மன்னர்கள் வாழ்ந்த கோட்டைகள், அரண்மனைகள் ஒன்றுகூட இருப்பதாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் அடையாளமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையானது (Gingee Fort Declared A World Heritage) இன்றும் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
834 ஆண்டுகள் பழமை வாழ்ந்தது
செஞ்சிக் கோட்டையானது 834 ஆண்டுகள் ஆகியும் தமிழக மன்னர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஒரே அடையாளமாக இருக்கிறது. இந்த கோட்டையில் தானிய களஞ்சியங்கள், அகழி, தோரண வாயில்கள், காவல் அரண்கள், உடற்பயிற்சி கூடம், பீரங்கி மேடை, வெடிமருந்து கிடங்கு, பாதாள சிறை, மதில் சுவர் என ஒரு கோட்டைக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் செஞ்சிக் கோட்டை கொண்டுள்ளது.
செஞ்சிக் கோட்டை வரலாறு (Gingee Fort Declared A World Heritage)
செஞ்சிக் கோட்டையின் வரலாற்றை புரட்டிப் பார்த்தோமானால் முற்கால சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு செஞ்சி எழுச்சி பெற்றுள்ளது. மேலும் இன்றைய செஞ்சி, முந்தைய காலத்தில் ஆந்திராவின் நெல்லூரில் இருந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் வரை பரவியிருந்த நெடுநிலத்தின் தலைநகரமாக இருந்துள்ளது. மேலும் முந்தைய காலத்தில் செல்வ செழிப்போடு இருந்த செஞ்சியை போர்ச்சுகீசிய மதபோதகர் ஒருவர் ‘இந்தியாவில் நான் கண்ட நகரங்களில் செஞ்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது’ என்று கூறியிருப்பதில் (Gingee Fort Declared A World Heritage) இருந்தே, நாம் முற்கால செஞ்சியின் செழிப்பையும், அழகையும் தெரிந்து கொள்ளலாம்.
கிழக்கு உலகத்தின் டிராய் கோட்டை
செஞ்சியை சுற்றிலும் நான்கு மலைகளும், அதன் உச்சியில் ராஜகிரி கோட்டை, ராணி கோட்டை, சுற்றி காவல் அமைப்புகள், பிரம்மாண்டமான கோட்டைச்சுவர் இவற்றின் காரணமாக ஐரோப்பியர்கள் செஞ்சி கோட்டையை ‘கிழக்கு உலகின் டிராய் கோட்டை’ என வர்ணித்துள்ளனர். இதுவே செஞ்சி கோட்டையின் (Gingee Fort Declared A World Heritage) கம்பீரத்தை தெளிவாக காட்டுகிறது. இன்றைக்கும் பல்வேறு ஆச்சரியங்களை தாங்கி நிற்கும் செஞ்சி கோட்டையை ‘உலக பாரம்பரிய சின்னமாக’ அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பிற்கு மத்திய அரசு கடந்த 2024-ம் வருடம் பரிந்துரை செய்திருந்தது.
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு
இந்த பரிந்துரையை ஏற்ற யுனெஸ்கோ அமைப்பினர்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் தலங்களுக்கான சர்வதேச ஆணைய உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் செஞ்சி கோட்டையை 2024-ம் வருடமே நேரில் ஆய்வு செய்தனர். கோட்டையின் உறுதித் தன்மை, சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்து நேரடி ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் தான் யுனெஸ்கோ அமைப்பு செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?