Glenn McGrath On Bumrah Career : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மெக்ராத் தகவல்...

பந்துவீச்சாளர் பும்ரா :

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா. இவர் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் இருந்துள்ளார். இந்தியாவுக்கும் தலை சிறந்த பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். அவர் காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் வரை விளையாடாமல் இருக்கிறார். தற்போது தான் காயம் குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. வருகின்ற அயர்லாந்து தொடரில் அவர் கேப்டனாக பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கூட மிகவும் நேர்த்தியாக பந்து வீசக் கூடியவர்.

ஐ பி எல் இன் ஜாம்பவான் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் ஓபனிங் ஓவரில் மட்டுமல்லாமல் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். யார்க்கர் வந்து வீசுவதில் பிரபலமானவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் போது மலிங்கா அவரின் வழிகாட்டுதலின் பேரில் அவர் சிறப்பாக பந்து வீசத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. அவரது பந்துவீச்சு மிகவும் ஒரு சிக்கலான ஸ்டைல் ஆகும். இதுதான் அவரின் காயத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

Glenn McGrath On Bumrah Career :

இதனால்தான் அவர் அடிக்கடி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்றும் அவர் சீக்கிரமாகவே தனது ஓய்வையும் அறிவிப்பார் எனவும் திடுக்கிடும் காரணங்களை பட்டியலிடுகிறார் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் மெக்ராத். நான் பும்ராவின் தீவிர ரசிகன் என்றும் அதனால் தான் அவர் மீது ஒரு அக்கறையில் எச்சரிக்கை விடுப்பதாகவும் கூறுகிறார். இம்ரான் கடந்த ஏழு ஆண்டு காலமாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக பல அற்புதமான போட்டிகளில் வென்று தந்துள்ளார்.

அவருடைய பந்து வீசும் முறைதான் அவருக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி அந்த முறையின் காரணமாகத்தான் அவர் உடலின் அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. அப்படி இருந்தால் இன்னும் நிறைய ஆண்டு காலம் அவரால் கண்டிப்பாக விளையாட முடியாது.

இப்போது ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச போட்டிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வேக பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வே கிடையாது. இங்கிலாந்து வீரர்கள் பிராட் மற்றும் ஆண்டர்சன் போன்று எல்லா வீரர்களும் அதிக ஆண்டு காலம் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். இதனால் பும்ரா அவர்கள் ஏதேனும் ஒரு வித போட்டியில் இருந்து சீக்கிரம் ஓய்வு பெற வேண்டும். ஏனெனில் மூன்று வித போட்டிகளும் விளையாடுவது எப்போதும் கடினமான ஒன்றாகும். அப்படி சீக்கிரம் எதாவது ஒன்றிலிருந்து ஓய்வு பெற்றால் தான் அவர் இன்னும் அதிக ஆண்டு காலம் இந்திய அணிக்காக பந்து வீச முடியும் என்று மெக்ராத் தெரிவித்திருந்தார்.

Latest Slideshows

Leave a Reply