Glimpse Of Harold Das :லியோ அர்ஜுனின் ஹெரோல்ட் தாஸ் வீடியோ வெளியீடு...

Glimpse Of Harold Das :

Glimpse Of Harold Das : ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘லியோ’ படத்தில் அவர் நடித்த ‘ஹரோல்ட் தாஸ்’ கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ (Glimpse Of Harold Das) ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ ஆகும். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் சத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், மீண்டும் காஷ்மீருக்கு பறந்த படக்குழு அங்கு மேலும் சில காட்சிகளை படமாக்கி வருகின்றனர். படம் தொடங்கியதில் இருந்தே படம் தொடர்பான அப்டேட்களை சரியான இடைவெளியில் தந்து ரசிகர்களிடம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. படக்குழு சமீபத்தில் சஞ்சய்தத்தின் பிறந்தநாளன்று வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் அவர் ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தெரியவந்தது. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து லியோ திரைப்படம் குறித்த பதிவு ஒன்றை புரொடக்ஷன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் ‘அதுதான் கணக்கு புரிதா உனக்கு’ என்று பதிவிட்டு லியோ திரைப்படம் வெளியாக இன்னும் 67 நாட்களே உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடினர். இதற்கிடையில், படத்தின் தயாரிப்பாளர் லலித், ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளன்று படத்தின் மற்றொரு அப்டேட் வெளியிடப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் ‘லியோ’ படத்தின் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கான மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஹரோல்ட் தாஸ்’ என்ற கதாபாத்திரத்தில் இரத்தம் தெறிக்க தெறிக்க அனல் பறக்க மிரட்டலான லுக்கில் அர்ஜுன் இருக்கும் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்துள்ளது. ‘லியோ’ படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், அர்ஜுனின் புகைப்படம் எதுவும் இணையத்தில் இதுவரை கசிந்ததில்லை. தற்போது அர்ஜுன் பிறந்தநாளையொட்டி முதன்முறையாக அவரது கேரக்டருக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் ‘ஹரோல்ட் தாஸ்’ கிளிம்ஸ் வீடியோவை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply