Global Hyperloop Competition 2025 : சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி பிப்ரவரி 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது

இது ஆசியாவின் முதல் சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி ஆகும். இது தையூரில் அமைந்துள்ள IIT Chennai-யின் செயற்கைக்கோள் (Global Hyperloop Competition 2025) வளாகமான ‘டிஸ்கவரியில் பிப்ரவரி 21-ம் முதல் 25 வரை நடைபெறுகிறது. இந்த சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி இந்தியாவை Hyperloop கண்டுபிடிப்புகளின் மையத்தில் நிலைநிறுத்த உள்ளது. போக்குவரத்துத் துறையில் இளம் தலைமுறையினரை ஊக்குவித்து அதிவேகப் போக்குவரத்து அமைப்புகளை ஏற்றுக் கொள்வதை விரைவுபடுத்துவதுதான் இப்போட்டியின் நோக்கமாகும்.

200 மாணவர்கள் கொண்ட பத்து அணிகள் இந்த சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியில் போட்டியிடுகின்றன. மேலும் உலகம் முழுவதிலுமிருந்து இயக்கம், ஆராய்ச்சி மற்றும் Hyperloop துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 150 தொழில்துறை பிரதிநிதிகள் இந்த போட்டியில் கலந்துகொள்வார்கள்.

இப்போட்டி Chennai IIT-ன் தனித்துவமான Hyperloop சோதனை உள்கட்டமைப்பில் நடைபெறும். இந்திய ரயில்வேத் துறை ஒத்துழைப்புடன் இந்த அதிநவீன தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. Chennai IIT, IITM பிரவர்த்தக், மற்றும் SEAINDIA ஆகியவை இணைந்து நடத்தும் இப்போட்டிக்கு (Global Hyperloop Competition 2025) ரயில்வே அமைச்சகமும் ஒத்துழைப்பை வழங்குகிறது

Hyperloop பற்றிய குறிப்புகள் (Global Hyperloop Competition 2025)

Hyperloop என்பது ஏறத்தாழ வெற்றிடக் குழாயில் பயணிக்கும் ஒரு அதிவேக 5-வது போக்குவரத்து முறை ஆகும். காற்றுத் தடுப்பு குறைக்கப்பட்டுள்ளதால் இந்த அதிவேக ரயில் மணிக்கு 1000 கி.மீ வேகத்தையும் தாண்டிச் செல்லும். கடந்த 2013-ம் ஆண்டில் ‘Hyperloop Alpha’ என்ற வெள்ளை அறிக்கை மூலம் Space X, மற்றும் Tesla ஆகிய நிறுவனங்களின் தலைவரான Elon Musk இவ்வுலகிற்கு Hyperloop பற்றி (Global Hyperloop Competition 2025) கூறியுள்ளார். இது உலகளாவிய திறமைகள், தொழில் தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்தல், ஒத்துழைப்பு, புதுமை மற்றும் Hyperloop தொழில்நுட்பத்தின் நிஜ உலக செயல்படுத்தலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Hyperloop ஆலோசகரான பேராசிரியர் சத்ய சக்ரவர்த்தி உரை

Global Hyperloop Competition 2025 - Platform Tamil

Chennai IIT-ன் Hyperloop ஆசிரிய ஆலோசகரான பேராசிரியர் சத்ய சக்ரவர்த்தி இந்த Hyperloop Competition 2025 மாணவர்கள் சரியான வாய்ப்புகளும் தளங்களும் வழங்கப்படும் போது எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு சான்றாகும். அடுத்த தலைமுறையினரை போக்குவரத்தில் எது சாத்தியம் என்பதை மறுவரையறை செய்ய ஊக்குவித்து அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கித் தயார்படுத்துவதே எங்களது நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

ஹைப்பர்லூப் மாணவர் தலைவர் பிரணவ் சிங்கால் உரை

Chennai IIT-ன் மாணவர் தலைவர் (ஹைப்பர்லூப்) பிரணவ் சிங்கால் இந்த Global Hyperloop Competition 2025 இந்தியாவில் பல்துறை ஒத்துழைப்பு, புதுமைகளை வளர்ப்பதற்கான எங்களது நோக்கத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. Chennai IIT-க்கு தையூரில் உள்ள 450 மீட்டர் சோதனைப் பாதை ஒரு மைல்கல் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள ஆர்வம் மிகுந்த பொறியாளர்களுக்கு ஓர் கலங்கரை விளக்காகவும் அமைந்துள்ளது. வாகன இயக்கத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் புத்திகூர்மை, குழுவாகப் பணியாற்றுதல் போன்றவற்றின் ஆற்றலை நிரூபிக்கிறது என்று கூறினார்.

Latest Slideshows

Leave a Reply