Global Naviagation Satellite System (GNSS) - புதிய சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை

தற்போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்திதான் வாகனங்கள் பயணிக்க முடியும் என்ற நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கம், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் சுங்க கட்டணம் ஆனது வசூலிக்கப்பட்டு வந்த போது, சுங்கச்சாவடிகளில் நேர விரயம் ஏற்பட்டு வாகனங்கள் எல்லாம் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஆனது ஏற்பட்டது.

மத்திய அரசு இதற்கு மாற்றாக ‘பாஸ்டேக்’ முறையை அமலுக்கு கொண்டு வந்தது. இந்த ‘பாஸ்டேக்’ முறைப்படி வாகனத்தின் முன்பகுதியில் ஒட்டியுள்ள வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் சுங்க கட்டண பணம் ஆனது கழித்துக் கொள்ளப்படும். இந்த ‘பாஸ்டேக்’ சிஸ்டம் ஓரளவு கூட்டத்தை கட்டுப்படுத்திய போதிலும் ஒரே நேரத்தில் வாகனங்கள் அதிக அளவு வரும் போது, சுங்கச்சாவடிகளில் நீண்ட நெரிசல் ஆனது ஏற்பட்டது.

இதனால் மத்திய அரசு சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி ஸ்கேன் செய்து கட்டணத்தை வசூலிக்கும் முறைக்கு மாற்றாக செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் புதிய கட்டண முறையை உருவாக்க முயற்சித்து வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த Global Naviagation Satellite System புதிய முறை ஆனது நாடு முழுவதும் விரைவுச்சாலைகளிலும் மற்றும் சில நெடுஞ்சாலைகளிலும் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்திருக்கிறது. பொதுமக்களுக்கு முதல் 20 கிலோமீட்டர் தொலைவுகளுக்கு டோல் கட்டணம் என்பது கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Global Naviagation Satellite System (GNSS) வேலை செய்யும் விதம் :

இந்த புதிய முறை ஆனது ‘பாஸ்டேக்’ முறைக்கு மாற்றாக செயற்கைக்கோள் அடிப்படையிலான முறை ஆகும். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இந்த பயண தூர அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை ஆனது குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்படும் என்று கடந்த 2024 ஜூலை மாதம் அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பின்படியே ஹரியானா மாநிலத்தில் பானிபட் – ஹிசார் பிரிவிலும் மற்றும் பெங்களூர் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவிலும் சோதனை முறையில் இத்திட்டமானது அமல்படுத்தப்பட்டது.

  • இந்த Global Naviagation Satellite System (GNSS) வேலை செய்ய Ovum Pick-up என்ற கருவியை பொறுத்த வேண்டும்.
  • அதாவது வாகனங்களின் வெளிப்புறத்தில் செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன்-போர்டு யூனிட் எனப்படும் சிறிய Ovum Pick-up என்ற கருவியை பொறுத்த வேண்டும்.
  • இந்த Ovum Pick-up என்ற கருவி வாயிலாக G.P.S. தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளுடன் இணைப்பு ஏற்பட்டு வாகன பயண தூரம் ஆனது துள்ளியமாக கணக்கிடப்படும்.
  • அதன்பிறகு பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் செயற்கைக்கோள் வழியாக சுங்க கட்டணம் ஆட்டோமேட்டிக்காக கணக்கிடப்பட்டு,  ‘பாஸ்டேக்’ போலவே வங்கிக்கணக்கில் இருந்து ஆட்டோமேட்டிக்காக சுங்க கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 
  • வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தொலைவு என்பது கணக்கிடப்பட்டு டோல்கேட்டில் உள்ள ஸ்கேனர் மூலம் நேரடியாக பணம் என்பது எடுத்து கொள்ளப்படும்.
  • குறிப்பிட்ட தொலைவுகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளும் தற்போது செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
  • பாஸ்டேக் போலவே, இந்த Ovum Pick-up என்ற கருவியை அரசு இணையதளங்களில் வாங்கி கொள்ள முடியும்.

ஒட்டுமொத்தமாக வாகனங்கள் எத்தனை கிலோ மீட்டர் ஓடியிருக்கிறது என்பதை பொறுத்தே கட்டணம் ஆனது வசூலிக்கப்படும் என்பதால், கண்டிப்பாக மத்திய அரசுக்கு இந்த திட்டத்தால் பெரிய லாபம் தான் ஏற்படும்.

Latest Slideshows

Leave a Reply