GOAT Advance Booking: மின்னல் வேகத்தில் நடைபெறும் "கோட்" முன்பதிவு

நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படம் வரும் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

GOAT Advance Booking: விறுவிறுப்பாக நடைபெறும் கோட் முன்பதிவு

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய நிலையில், விஜய் சினிமாவுக்கு முழுக்கு போடப் போவதாலும், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு வெளியாகும் முதல் படம் என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோட் படத்திற்கான முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் கோட் படத்திற்கு டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். டிக்கெட் முன்பதிவு தொடங்கியதில் இருந்தே டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோட் டிக்கெட் வாங்க ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக வெற்றிக் கழக கட்சியினரும் போட்டி போட்டு டிக்கெட் வாங்குவதால் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கோட் படத்தின் மீது எதிர்பார்ப்பு

உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் கோட் படம் வெளியாகவுள்ளது. கோட் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தி கோட் படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. AI அதிநவீன தொழில்நுட்பம் மூலம் இந்த படம் வெளியாக இருப்பது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல ஹீரோவாக திகழ்ந்த நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார்.

விஜய்யின் கோட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரசாந்த் மற்றும் மோகன் மீண்டும் களமிறங்குவார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா ஆகியோர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளனர். கோட் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய  மொழிகளில் வெளியாகிறது. இந்தியா மட்டுமில்லாமல் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

Latest Slideshows

Leave a Reply