GOAT Box Office Day 1 : கோட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட் ஆகும். இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் 68வது படமாகும். இந்த படம் நேற்று அதாவது செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, ஜெயராம், மைக் மோகன், வைபவ், பிரசாந்த், பிரேம் ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்தது போல், ஏ.ஐ. காட்சி தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படம் முதல் நாள் வசூல் (GOAT Box Office Day 1) எவ்வளவு என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

கோட் :

சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனால் அவரது திரையுலக வாழ்க்கையில் கோட் இரண்டாவது கடைசி படமாக அமைந்துள்ளது. இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் சோலோவாக வெளியானது. இது தவிர உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5000 திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.  அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் படத்தில் சில காட்சிகளும் பின்னணி இசையும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் தோனி வருவது, அப்போது இசைக்கப்படும் படையப்பா தீம், அதன் பிறகு மங்காத்தா தீம் என அனைத்தும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயனின் கேமியோ அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. த்ரிஷா வந்து மட்ட பாடலுக்கு நடனமாடியது என அனைத்துமே தியேட்டரில் தீபாவளி தான்.

சிறப்பு காட்சி :

  • தமிழகத்தில் உள்ள ரசிகர்களுக்கு படம் அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே படத்தை திரையிட அனுமதிக்கப்பட்டது.
  • தமிழகத்தைப் பொறுத்தவரை பல இடங்களில் இரண்டு மூன்று நாட்களுக்கு அனைத்து காட்சிகளுக்கும் பெரும்பான்மையான திரையரங்குகளில் டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது.

GOAT Box Office Day 1 - வசூல் நிலவரம் :

  • பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களின்படி, இப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் சுமார் 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.38 கோடியும், தெலுங்கில் ரூ.2 கோடியும், மலையாளத்தில் ரூ.2 கோடியும் வசூலித்துள்ளதாக (GOAT Box Office Day 1) கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வசூலித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • படக்குழு விரைவில் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இப்படம் முதல் நாளில் நல்ல வசூலை அள்ளியதால் ரூ.1000 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற சாதனையைப் படைக்கும் என ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply