GOAT Movie Release Date : 'GOAT' படத்தின் ரிலீஸ் எப்போ தெரியுமா?

விஜய் தற்போது ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கேரளா ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ‘கோட்‘ படத்தின் வெளியீடு குறித்த முக்கிய தகவல்களை (GOAT Movie Release Date) படக்குழு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

GOAT :

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள இயக்குனராக வெங்கட் பிரபு உள்ளார். பொதுவாக அவரது படங்களில் பொழுதுபோக்குக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவுக்கு கமர்ஷியலாக கலகலப்பான படங்களை இயக்குவதில் வல்லவரான வெங்கட் பிரபு, முதன்முறையாக விஜய்யுடன் ‘GOAT’ படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் ‘கோட்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த கூட்டணி முதன்முறையாக இணைந்திருக்கும் நிலையில், இவர்களது கூட்டணியில் என்ன மாதிரியான படைப்பாக ‘கோட்’ வெளியாகப் போகிறது என்பதை அறிய கோலிவுட் திரையுலகம் காத்திருக்கிறது.

வெங்கட் பிரபு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து படத்தை இயக்கி வரும் இப்படத்தில் ஜெயராம், மைக் மோகன், பிரபுதேவா, பிரேம்ஜி அமரன், சினேகா, லைலா, பிரசாந்த், அஜ்மல், வைபவ், விடிவி கணேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார்.

GOAT Movie Release Date :

கடந்த சில மாதங்களாக ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் வெளியீடு (GOAT Movie Release Date) குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகும் நிலையில், ‘கோட்’ படத்தை முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ‘கோட்’ படத்துக்குப் பிறகு விஜய், ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு தீவிர அரசியலில் இறங்கவுள்ளார். இதனால் இவரது ‘தளபதி 69’ படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. இதற்கிடையில், எச்.வினோத் படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ‘தளபதி 69’ தரமான அரசியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply