GOAT Movie Review : கோட் திரைப்படத்தின் திரை விமர்சனம்

GOAT Movie Review : தமிழகத்தில் வெற்றிப் பறக்குமா? – The Code Review முழு விவரம் இதோ. வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) 2024 செப்டம்பர் 5ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதா? இல்லையா? படத்தின் கதை, மதிப்பீடு போன்றவை தற்போது (GOAT Movie Review) விரிவாக பார்க்கலாம்.

தி கிரேட்டிஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) :

வெங்கட் பிரபு இயக்கிய இந்த அதிரடி திரில்லர் திரைப்படத்தில் தளபதி விஜய் நாயகனாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் நடிகர் விஜய்யின் 68வது திரைப்படமாகும். இந்த படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர், மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு, பார்வதி நாயர், ஜெயராம், லைலா, பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன்-த்ரில்லர் படமான கோட் படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் எடிட் செய்துள்ளார்.

கோட் ரிலீஸ் :

கோட் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடாக 2024, செப்டம்பர் 5ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 333 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 5000+ தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் பெரிதாக பேசப்படாத இப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை (GOAT Movie Review) ஏற்படுத்தியுள்ளது மேலும் பல இடங்களில் டிக்கெட் கிடைக்காத நிலையிலும் ரசிகர்கள் படத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

GOAT Movie Review - கோட் திரை விமர்சனம் :

கோட் படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளது. திகிலூட்டும் சண்டைக் காட்சிகளுடன் கூடிய வேகமான திரைக்கதை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும். அதிநவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் பெரிய திரையில் பிரமிக்க வைக்கும் காட்சிகள் படத்திற்கு அதிக மைலேஜ் கொடுக்கிறது. கார் சேஸிங், பைக் ரைடிங் மற்றும் பல சாகச சண்டைகள் படத்தின் மேக்கிங்கிற்கும் திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது. எதார்த்தமான கதை இல்லாமல் ஒரு அசாதாரண கதையை தமிழ் மற்றும் இந்திய சினிமா ரசிகர்கள் ரசிக்கும்படி திரைக்கதையை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

படத்தின் கதை அழுத்தம், காட்சி, கதாபாத்திரம் மற்றும் படத்தில் விஜய்யின் கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள மாறுபாடு என இயக்குநர் பல புள்ளிகளில் ஸ்கோர் செய்துள்ளார். நடிகர் விஜய் தான் நடிக்கும் கேரக்டருக்கு ஏற்றவாறு அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் நடித்துள்ள முன்னணி கலைஞர்கள் பலரும் தங்கள் பொறுப்பை ஏற்று கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். படத்தின் மிகப்பெரிய குறை படத்தின் நீளம் தான். படத்தின் நீளத்தை சமாளிக்கும் வகையில் பல அதிரடி திருப்பங்கள், சண்டைக் காட்சிகள், மிகப்பெரிய ஜாம்பவான்களின் கௌரவ ரோல் என ஆச்சரியங்கள் நிறைந்த படமாக உள்ளது.

Latest Slideshows

Leave a Reply