GOAT Release Date: கோட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்யை வைத்து வெங்கட் பிரபு GOAT படத்தை இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு முதன்முறையாக விஜய்யுடன் இணைந்திருப்பதால், GOAT எந்த மாதிரியான படமாக அமையும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நிறைவடைந்தது. அந்த ஷெட்யூலில் படத்தின் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இப்படத்தில் இன்னும் கொஞ்சம் வேலைகள் மட்டும் இருப்பதாக கூறப்படும் சூழலில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

GOAT

விஜய் கடைசியாக நடித்த லியோ படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட் ஆனார் விஜய். படத்திற்கு GOAT எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மைக் மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் GOAT அந்த நிறுவனத்தின் 25வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தாய்லாந்து, துருக்கி போன்ற நாடுகளில் படப்பிடிப்பை முடித்த படக்குழு இறுதியாக கேரளா சென்றது. அங்கு விஜய் மற்றும் வெங்கட் பிரபுவுக்கு கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கேரளா ரசிகர்களுடன் விஜய் கலந்துரையாடினார். அந்தப் பேச்சுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

 GOAT ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று முன்னதாகவே செய்திகள் வெளியாகின. இது உண்மை கதை என பொய்யான வதந்திக்கு வெங்கட் பிரபு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் இந்த படம் டைம் ட்ராவல் ஜானரை மையமாக வைத்து எடுக்கப்படும் என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொதுவாக டைம் டிராவல் சார்ந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த படத்திற்காக விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் அவர் கடைசியாக நடித்த லியோ படம் ஓரளவு வெற்றி பெற்றது. எனவே இந்தப் படத்தை விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் சிறப்பாகக் கொடுக்க வெங்கட் பிரபு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் ஒரு ட்ரீட் இருக்கும் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

GOAT Release Date அறிவிப்பு

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் கோட் படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய அறிவிப்புடன், ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய் கண்ணாடி அணிந்து மிகவும் அழகாக காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply