GOAT Update : GOAT அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இது பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது, ஆனால் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. இதற்கிடையில் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியதால், ஏற்கனவே இருவரும் இணைந்து மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தை கொடுத்ததால் லியோ மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் லியோ ஏமாற்றியது. முக்கியமாக திரைக்கதையிலும் கதையிலும் புதுமை இல்லை. வேண்டுமென்றே படத்தை LCU உடன் இணைத்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

GOAT :

இதற்கிடையில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார் விஜய். GOAT எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. பிறகு தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பை நடத்தினார் வெங்கட் பிரபு. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, பிரபல பாடகியான பவதாரிணி, பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பவதாரிணியின் மரணத்திற்குப் பிறகு GOAT படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. யுவனும் வெங்கட் பிரபுவும் தங்கையை நினைத்து துக்கத்தின் உச்சத்திற்கு சென்றனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பக்ரித் பண்டிகைக்கு படத்தை வெளியிட வெங்கட் பிரபு மும்முரமாக இருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் விஜய் டபுள் ஆக்ஷன் என்றும், இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகும் என கடந்த சில மாதங்களாகவே வதந்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்க யுவன் ஷங்கர் ராஜாவும் ஒரு காரணம். கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்திருந்தார். அதன் பிறகு பல வருடங்களாக விஜய்க்கு இசையமைக்கவில்லை. தற்போது GOAT படத்திற்கு இசையமைத்து வரும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பெரிய மேஜிக் செய்வார் என விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

GOAT Update :

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா GOAT படம் குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் (GOAT Update) ட்ரெண்டாகி வருகிறது. படம் பற்றி பேசிய அவர், “படம் பற்றி இப்போது எதுவும் கூறமாட்டேன். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும். அப்போது அனைத்து அப்டேட்டுகளும் ரசிகர்களுக்கு சரியாக கிடைக்கும். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்பது எனக்கு தெரியும். இந்தப் படத்துக்காக எனக்கும் அதே எதிர்பார்ப்பு இருக்கு. எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply