Gold Treasure in the Deep Sea : மூழ்கிய கப்பலில் ரூ.1.66 லட்சம் கோடி தங்கப் புதையல்

ஆழ்கடலில் ரூ.1.66 லட்சம் கோடி தங்கப் புதையல். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1708 ஆம் ஆண்டு, பெருவிலிருந்து ஸ்பெயினுக்கு பயணித்த  ‘சான் ஜோஸ் கரீபியன்’ என்ற பண்டைய ஸ்பானிஷ் கப்பல் எதிரிகளால் தாக்கப்பட்டு கொலம்பியாவின் கார்டஜீனா நகருக்கு அருகிலுள்ள தீவுக்கூட்டமான ரொசாரியோ தீவுகளைச் சுற்றியுள்ள கடலில் மூழ்கியது.

இந்த சான் ஜோஸ் கரீபியன் கப்பல் ஆனது 200 டன் தங்கம், வெள்ளி, ரத்தினங்கள், 64 பீரங்கிகள் மற்றும் 600 பாதுகாப்புப் பணியாளர்களுடன் பனாமா கால்வாய் வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு கடலில் மூழ்கியது. பாதுகாப்புப் பணியாளர்கள் பலர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். எஞ்சிய பணியாளர்கள் தப்பித்து பாதுகாப்பான இடத்திற்குச் சென்று உயிர் பிழைத்துள்ளனர்.

இந்த கப்பல் கடலில் மூழ்கிய சில ஆண்டுகளிலேயே எங்கு மூழ்கி இருக்கிறது என்கிற தகவல்கள் சேகரிக்கபட்டது. இருந்தபோதும் இந்த கப்பல் மீட்கபட்டால் கப்பலில் இருக்கும் எக்கச்சக்க விலையுயர்ந்த சொத்தை யார் எடுப்பார்கள் என்பதில் குழப்பம் இருந்ததால் மீட்பதற்கான வேலைகள் தொடரப்படாமல் கைவிடபட்டிருக்கிறது.

கொலம்பியா அறிவித்துள்ள புதிய ஆராய்ச்சித் திட்டத்தின் நோக்கம் :

கொலம்பிய அரசு இந்த கப்பல் கரீபியன் கடலில் 600 மீட்டர் ஆழத்தில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதை  கண்டுபிடிக்கப்பட்டதாக 2015-ம் ஆண்டு அறிவித்தது. இப்போது இந்த கப்பலை தேடும் பணி ஆனது துவங்கபட்டு இருக்கிறது. கொலம்பியாவின் தேசிய கடற்படை மற்றும் கொலம்பியாவின் தேசிய கடல்சார் இயக்குநரகம் ஆகியவை 2022-ம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வில் கப்பலில் இருந்த (Gold Treasure in the Deep Sea) பொருட்களின் புகைப்படங்கள் வெளியாகின.

அப்புகைப்படத்தில் பீரங்கிகள், சில நாணயங்கள், ஜாடிகள், பாத்திரங்கள், ஊசிகள், கண்ணாடிகள், பீங்கான்கள், மற்றும் சீன மேஜைப் பாத்திரங்கள் சிலவற்றைக் காண முடிந்தது. காப்பக ஆதாரங்களிலிருந்தே இந்தக் கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகள் குறித்த விவரங்கள் ஆனது அறிய வருகின்றன.  ஆனால் இந்த விவரங்களை கப்பல் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து நேரடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. கொலம்பியா அறிவித்துள்ள புதிய ஆராய்ச்சித் திட்டத்தின் நோக்கம் கப்பலில் என்ன இருக்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை அறிவது ஆகும். ஆழ்கடலில் உயர் தொழில்நுட்பம் மூலம் அக்கப்பலில் உள்ள பொக்கிஷத்தைக் கைப்பற்ற ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

சான் ஜோஸ் என்ற இந்த 40 மீட்டர் நீளமுள்ள ஸ்பானியக் கப்பலின் வடிவமைப்பு 20-ம் நூற்றாண்டு மனித கண்டுபிடிப்புகளிலேயே மிக சிக்கலான தொழில்நுட்பம் கொண்டதாகும். இந்த கப்பல் ஆனது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலிருந்தும் சரக்குகளை ஏற்றிச் சென்றிருக்கிறது. கொலம்பியா அரசு சமீபத்தில் சான் ஜோஸ் கப்பல் கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொலம்பியா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் அமெரிக்கா, ஸ்பெயின், பெரு உள்ளிட்ட பல நாடுகள் உஷார் ஆகியுள்ளன. ICANH சிறப்பு ரிமோட் சென்சார்களைப் பயன்படுத்தி எடுக்கும் புகைப்படங்களின் அடிப்படையில், ஆராய்ச்சி மற்றும் பிரித்தெடுத்தல் ஆனது தொடரும் என கூறபட்டு இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply