Golden Globe Awards 2024 : பல விருதுகளை குவித்த 'ஓபன்ஹெய்மர்' திரைப்படம்

2024-ம் ஆண்டுக்கான 81-வது ‘தி கோல்டன் குளோப் விருது’ வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் இந்திய நேரப்படி நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் ஜோ கோய் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் சிபிஎஸ் மற்றும் பாராமெளண்ட் ஆகிய ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதில் ஓபன்ஹெய்மர் திரைப்படத்துக்கு அதிக விருதுகள் (Golden Globe Awards 2024) கிடைத்துள்ளன. இன்செப்ஷன், டன்கிர்க், மெமென்டோ, தி டார்க் நைட்,  இன்டர்ஸ்டெல்லார்,  டெனெட் என இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும் விருதுகளை வென்றது. அவர் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹெய்மர்’ திரைப்படம் பல விருதுகளை குவித்துள்ளது. ஹாலிவுட் ஃபாரின் ப்ரெஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பு சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறந்த படைப்புகளையும் கலைஞர்களையும் ஒவ்வெறு வருடமும்  கௌரவித்து வருகிறது. இதுவே கோல்டன் குளோப் விருது என அழைக்கப்படுகிறது. ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக  உலக திரைக்கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் விருதாக ‘தி கோல்டன் குளோப்’ விருதுகள் பார்க்கப்படுகின்றன.

Golden Globe Awards 2024 - விருதுகளை தட்டித் தூக்கிய 'ஓபன்ஹெய்மர்' திரைப்படம் :

Golden Globe Awards 2024 ஆண்டுக்கான சிறந்த மோஷன் படப்பிரிவில் ஓபன்ஹைமர், அனாடமி ஆஃப் எ ஃபால் தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட், கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர், மூன் மேஸ்ட்ரோ, ஃபாஸ்ட் லைவ்ஸ் ஆகிய திரைப்படங்கள்  பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில் சிறந்த திரைப்படம் மற்றும்  சிறந்த இயக்குநராக கிறிஸ்டோபர் நோலன், சிறந்த நடிகராக சிலியன் மர்பி, சிறந்த துணை நடிகராக ராபர்ட் டவுனி ஜூனியர், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் லுட்விக் கோரன்சன் ஆகியோர் ஓபன்ஹெய்மர் படத்துக்காக விருதுகள் வென்றுள்ளனர்.

ஓபன்ஹெய்மர் திரைப்படத்தின் கதை :

ஜப்பானின் முக்கிய நகரமான ஹீரோஷிமா மற்றும் நாகஸாகியை உருத்தெரியாமல் அழித்து சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாக காரணமான இருந்த அணுகுண்டின் தந்தை எனக் கொண்டாடப்பட்ட ஓபன்ஹெய்மருக்கு எதிராக தொடரப்படும் தேசதுரோக வழக்கும் அதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா இல்லையா என்கிற கதையை மையக்கருவாக வைத்து இயக்குநர் கிறிஸ்டோபர் ஓபன்ஹெய்மர் திரைப்படத்தை இயக்கி உள்ளார். உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணுகுண்டை பற்றி படம் இதுவாகும். இப்படத்தில் அணுகுண்டு வெடிக்கும் ஒரு காட்சி இருப்பதாகவும் அதற்காக உண்மையில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

Latest Slideshows

Leave a Reply