Good Bad Ugly Review : குட் பேட் அக்லி திரைப்படத்தின் விமர்சனம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி‘ திரைப்படம் இன்று வெளியாகியள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் இது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்கள் கொண்டாடும் (Good Bad Ugly Review) விதமாக அமைந்துள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

குட் பேட் அக்லி

குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அதைத் தவிர, இந்தப் படத்தில் ஒவ்வொரு மொழிக்கு என பல வில்லன்கள் நடித்துள்ள படமாக அமைந்துள்ளது. அஜித் படங்களில் அதிக வில்லன்களைக் கொண்ட படமாக (Good Bad Ugly Review) இப்படம் உள்ளது. நகைச்சுவையைப் பொறுத்தவரை, ரெடின் கிங்ஸ்லி மற்றும் யோகி பாபு ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இருவரின் குறும்புகளும் படத்தை ரசிக்க வைக்கின்றன. புஷ்பா படத்தைத் தயாரித்த மைத்ரி மூவிஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அஜித் நடித்த வில்லன், துணிவு போன்ற படங்களின் கலவையாக இந்த படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். நீங்கள் 200 ரூபாய் டிக்கெட்டில் படத்தைப் பார்க்கிறீர்கள் என்றால், இந்தப் படம் நிச்சயமாக உங்களுக்கு 500 ரூபாய் மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

Good Bad Ugly Review - Platform Tamil

படத்தின் திரைவிமர்சனம் (Good Bad Ugly Review)

இந்தப் படத்தின் கதை என்னவென்றால், மிகவும் மோசமான அஜித் குமார், தனக்கு இனி எதுவும் தேவையில்லை என்பதற்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு தனது வாழ்க்கையை மாற்ற விரும்புகிறார். ஆனால், அவர் தனது மகனுக்காக மீண்டும் வில்லனாக (Good Bad Ugly Review) மாறி, மீண்டும் தனது பழைய வேடத்தை அணிந்துகொள்கிறார். இதுதான் படத்தின் கதை. இதை வெறும் பழிவாங்கும் கதையாக நினைக்காதீர்கள். இந்தப் படம் அப்பா-மகன் சென்டிமென்ட், மனைவி-கணவன் சென்டிமென்ட் ஆகியவற்றின் கலவையாகும். இது த்ரிஷாவும் அஜித்தும் இணைந்து நடிக்கும் ஆறாவது படமாகும். அஜித் படத்தில் அதிக சண்டைக் காட்சிகள் இருக்காது. ஆனால் இந்தப் திரைப்படத்தில் அட்டகாசமான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் நடிகை சிம்ரன் வித்தியாசமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இப்படியும் சிம்ரன் நடிப்பாரா என படம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

குட் பேட் அக்லி முழுக்க முழுக்க ஒரு மாஸ் என்டர்டெய்னர் படமாகும். அஜித் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட படம். சிறப்பாக தொடங்கும் முதல் பாதியை தொடர்ந்து இரண்டாம் பாதி ஒரு ஃப்ளாஷ்பேக் எபிசோடுடன் நன்றாக தொடங்குகிறது. ஆனால் அதன் பிறகு எதுவும் இல்லை, ஒரு சில மாஸ் காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன, அஜித்தை ஒரு விண்டேஜ் முறையில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும், படத்தில் கதை அல்லது உணர்ச்சி ரீதியான தொடர்பு அதிகம் (Good Bad Ugly Review) இல்லை. மேலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு சோர்வடையச் செய்யும் பல வழக்கமான பில்ட்-அப் காட்சிகள் மற்றும் அதிரடி காட்சிகள் உள்ளன. பின்னணி இசை நன்றாக இருக்கிறது. தயாரிப்பு மதிப்புகள் நன்றாக உள்ளன. இது நிச்சயமாக சமீபத்திய காலங்களில் அஜித்தின் சிறந்த படமாக அமையும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். 

Latest Slideshows

Leave a Reply