Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, படத்தின் கதைக்களம் குறித்த ஒரு தகவல் இணையத்தில் (Good Bad Ugly Story) வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இது குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குட் பேட் அக்லி

கடந்த சில வருடங்களில் வெளியான அஜித் படங்களிலேயே, மிகப்பெரிய திரைப்படம் என்றால் அது குட் பேட் அக்லி தான். படத்தின் தலைப்பு முதல் அஜித்தின் கெட்டப் வரை அனைத்தும் (Good Bad Ugly Story) ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு அஜித் ரசிகராக, படத்தில் இருந்து என்னென்ன விஷயங்களை எதிர்பார்ப்பார்களோ அதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று டீசரை பார்த்தாலே தெரியும். குட் பேட் அக்லி என்பது முழுக்க முழுக்க அஜித் மற்றும் அவரது ரசிகர்களுக்காக ஆதிக் ரவிச்சந்திரன் சமர்ப்பிக்கும் படம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் இந்த திரைப்படம், எதிர்பார்ப்புகளை நிச்சயமாக பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.

அஜித்தின் 63-வது படமான இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். த்ரிஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, பிரசன்னா, சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோது, ​​அது பொங்கல் வெளியீடாகக் குறிப்பிடப்பட்டது. 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று குட் பேட் அக்லி வெளியாகும் (Good Bad Ugly Story) என கூறிருந்தனர். ஆனால் விடாமுயற்சி பொங்கலுக்கு வருவதாக அறிவித்ததால் வேறு வழியின்றி குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தள்ளிபோனது. தற்போது இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அதற்கான வேலையில் படக்குழு கடுமையாக உழைக்கத் தொடங்கியுள்ளது.

குட் பேட் அக்லி படத்தின் கதை (Good Bad Ugly Story)

Good Bad Ugly Story - Platform Tamil

குட் பேட் அக்லி படத்தின் டீசரை பார்த்த பிறகும் ரசிகர்களால் படத்தின் கதை என்னவென்று கணிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு ஆதிக் ரவிச்சந்திரன் புத்திசாலித்தனமாக டீசரை கட் செய்திருந்தார். இந்நிலையில், இது குட் பேட் அக்லி படத்தின் கதை (Good Bad Ugly Story) என்று தற்போது இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது, ஒரு காலத்தில் மிகப்பெரிய கேங்ஸ்டராக இருக்கும் அஜித் எல்லாவற்றையும் மறந்து திருந்தி தனது குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கையை வாழ முடிவு செய்கிறார். ஆனால் அவரது பழைய வாழ்க்கை அவரை துரத்திக்கொண்டே வருகிறது. அதை அவர் எப்படி கடந்து அமைதியான வாழ்க்கை வாழ்கிறார் என்பது தான் குட் பேட் அக்லி படத்தின் கதை என்று இணையத்தில் பரவி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply