Good Bad Ugly Teaser : குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியீடு

அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் பிப்ரவரி 28-ம் தேதி இரவு 7.03 மணிக்கு (Good Bad Ugly Teaser) வெளியானது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் டீசர் எப்படி இருக்கு என்பதை பார்க்கலாம்.

குட் பேட் அக்லி

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடியவர் அஜித்குமார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் விடாமுயற்சி. அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே ஒப்பந்தம் ஆனா படம்தான் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தை விட குட் பேட் அக்லி படத்திற்குதான் அதிக எதிர்பார்ப்பு (Good Bad Ugly Teaser) இருந்தது. இதற்கு காரணம் படத்தில் அஜித்தின் கெட்டப்பும், அவரது மோசமான தோற்றமும்தான் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசைமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளனர்.

குட் பேட் அக்லி டீசர் (Good Bad Ugly Teaser)

Good Bad Ugly Teaser - Platform Tamil

இந்நிலையில் குட் பேக் அக்லி படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி (Good Bad Ugly Teaser) வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தை எதிர்பார்த்தது போல் பார்த்ததாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டீசரில் அஜித் பேசக்கூடிய டயலாக்குகளை ஷார்ட்ஸ் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள். கேஜிஎஃப் பட ஸ்டைலில் டீசர் தொடங்குகிறது. நாம் எவ்வளவு தான் குட்-ஆ இருந்தாலும், இந்த உலகம் நம்மை பேட் ஆக்குவது போன்ற டயலாக்குகளை அஜித் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, அஜித் இதுவரை நடித்த படங்களான தீனா, ரெட், வேதாளம், அசல், மங்காத்தா போன்ற படங்களின் தோற்றங்களும் குட் பேட் அக்லி படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு

குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியானதில் இருந்து தற்போதுவரை 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டீசரை (Good Bad Ugly Teaser) பார்த்த ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனை பாராட்டி வருகின்றனர். இளமை மற்றும் நடுத்தர வயது தோற்றத்தில் அஜித்தின் இந்த சாகசங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருவதுடன், உண்மையான ரசிகனின் சம்பவம் என பாராட்டி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply