Good Bad Ugly Trailer : குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் (Good Bad Ugly Trailer) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

குட் பேட் அக்லி

இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டது. இதுவும் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி (Good Bad Ugly Trailer) வெளியாகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆக்‌ஷன் படத்தில் அஜித் நடித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் அஜித் ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார். குட் பேட் அக்லி படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், யோகி பாபு, சாக்கோ உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர். கிரீடம் படத்திற்குப் பிறகு, நடிகர் அஜித்தின் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித்தின் கடைசி படமான விடாமுயற்சி ஒரு மென்மையான குடும்பப் படமாக (Good Bad Ugly Trailer) அமைந்திருந்தது. ஆனால் இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டது என்றும், ஒரு அதிரடி ஆக்‌ஷன் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் அஜித்தின் பிளாக்பஸ்டர் படங்களை அடிப்படையாகக் கொண்டது. மங்காத்தா, அமர்க்களம், பில்லா ஆகிய படங்களின் குறிப்புகள் ட்ரெய்லரில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் அஜித்தின் வில்லனாக நடிக்கிறார். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நடிகர் ஜாக்கி ஷெராஃப் மற்றும் நடிகை சிம்ரன் இந்த படத்தில் நடித்திருப்பது ட்ரெய்லரில் தெரியவந்துள்ளது.

குட் பேட் அக்லி ட்ரெய்லர் (Good Bad Ugly Trailer)

Good Bad Ugly Trailer - Platform Tamil

பல வருடங்களுக்குப் பிறகு அஜித்துக்கு ஒரு ரகளையான ட்ரெய்லர். கலர் புல்லாக அர்ஜுன் தாஸின் நடனத்துடனும், பின்னணியில் ‘ஒத்த ரூபா தாரேன்’ பாடலுடனும் தொடங்கும் இந்த ட்ரெய்லர், முழுமையான அதிரடிதான். அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாக விருந்தாக இருக்கும் என்பதை ட்ரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது. ட்ரெய்லரில் சண்டைக் காட்சிகள் கட் செய்யப்பட்ட விதம் நன்றாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆன இருங்க பாய், கார்டு மேல 16 நம்பர் சொல்லுங்க (Good Bad Ugly Trailer) போன்ற வசனங்கள் ட்ரெய்லரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.  அதேபோல் யோகி பாபு சொல்லும் ஏகே வர்றார் வழிவிடு என்ற வசனம் கவனம் ஈர்க்கிறது. படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பழைய அஜித் படங்களின் குறிப்புகளைத் அள்ளித் தெளித்திருப்பார் போல இருக்குறது. தனது மகனுக்காக மீண்டும் வன்முறையை நாடும் தந்தையாக அஜித் நடிப்பார் என்று ட்ரெய்லர் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply