Good Friday 2023: தன்னுயிர் தந்து  மண்ணுயிர் காத்த நாள் - புனித வெள்ளி

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் வெள்ளிக்கிழமை என்பது புனித நாளாக கருதப்படுகிறது. இந்து மதத்தினர்  வெள்ளிக்கிழமைகளில் தங்கள் பூஜை அறையை வாராவாரம் சுத்தம் செய்து தீபம் ஏற்றுகிறார்கள் மற்றும் கோவில்களுக்கு செல்கின்றனர்.

முகமதியர்கள் (முஸ்லிம்ஸ்) வெள்ளிக்கிழமைகளில் கட்டாயமாக 5 முறை நமாஸ் செய்கிறார்கள். அதே போல உலகமெங்கும் உள்ள கிருத்தவர்கள் இயேசு  சிலுவையில் அறையப்பட்ட நாளான இந்த வெள்ளிக்கிழமை நாளை புனித வெள்ளி (Good Friday) என்று வழிபடுகின்றனர்.  

திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்தும் நாள்

“வருத்தப்பட்டு பாரம் சுமக்கும்  ஜீவன்களே என்னிடம் வாருங்கள் நான் உங்கள் ஆத்மாவிற்கு  எல்லாம் இளைப்பாறுதல் தருகிறேன்”

இந்த புனித வெள்ளிக்கிழமை (Good Friday) நாளில் இயேசு சிலுவையில் தனது உயிரை துறந்து உலக மக்களுக்கு விண்ணக வாயிலைத் திறந்துவைத்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை ஆகும். தம்மையே இயேசு மனிதரின் மீட்புக்காகக் கையளித்தார். அவர் இறந்த நிகழ்ச்சியைத் திருப்பலியாகக் கொண்டாடுவது வழக்கம். இயேசு சிலுவையில் உயிர்துறந்ததால்  சிலுவை கிறித்தவர்களுக்கு ஒரு தனிப் பொருள் வாய்ந்த அடையாளம் ஆகும்.

மெழுகுவத்திகள் ஏற்றி வைக்கப்பட்டு அதன் நடுவே சிலுவை பவனியாகக் கொண்டுவரப்பட்டு குருவும் மக்களும் அந்த சிலுவையைத் தொட்டு முத்தமிடுவது வழக்கம்.  இரங்கற்பா போன்ற பாடல் வகைகளை இந்த நிகழ்ச்சியின் போது மக்கள் பாடுவார்கள்.

பாவங்களிருந்து மனிதர்களை மீற்பதறக்காக இயேசு தம்மையே அன்புக் காணிக்கையாகக் கொடுத்த  இந்த புனித வெள்ளிக் (Good Friday) கிழமையன்று இயேசுவோடு அன்புறவு கொள்ளும் விதத்தில் கிறித்தவர்கள் இயேசுவின் உடலை அப்ப வடிவில் அடையாளமாக உண்பார்கள். பின்னர் அனைவரும் அமைதியாகப் பிரிந்து செல்வார்கள். எனவே, புனித வெள்ளிக் (Good Friday) கிழமையன்று திருச்சிலுவைக்கு வணக்கம் செலுத்துவதுதை  முக்கிய நிகழ்வாக கிருத்தவர்கள் கருதுகின்றனர். 

சில அறிஞர்கள் மனிதர்களிடம் தோன்றும்

I – நான்  என்று மனிதர்களிடம் தோன்றும் சுய நல உணர்வை ஒரு குறுக்கு கோடு மூலம் அழிப்பதை சிலுவை உணர்த்துவதாக” கூறுகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply