Good Night Movie Review: 'குட் நைட்' திரைவிமர்சனம்
உலகில் வாழும் ஏராளமான மனிதர்களின் வரழ்க்கையில் பிரச்சனையாக இருக்கும் குறட்டையை மையமாக வைத்து ‘குட் நைட்’ என்ற தமிழ் படத்தை எடுத்துள்ளனர். படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
மீதா ரகுநாத், மணிகண்டன், ரமேஷ் திலக், இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பில், விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் நைட்’ ஆகும். குறட்டை பிரச்சனை உள்ள இளைஞன், ராசியே இல்லை என்று தன்னை நினைக்கும் நாயகி, திருமணமாகியும் குழந்தை இல்லாத தம்பதி, மகனை இழந்த மூத்த ஜோடி இவர்களுக்கு ஏற்படும் நட்பு, உறவு, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களுக்குள் இருக்கும் மகிழ்ச்சி ஆகியவையே ‘குட் நைட்’ திரைப்படமாகும்.
Good Night Movie கதை சுருக்கம்
குறட்டை பிரச்சனை கொண்ட நாயகன் மணிகண்டன், நண்பர்களால் கேலி செய்யப்படுகிறான், பிறகு காதலி அவரை விட்டுவிட்டு சென்று விடுகிறாள். இதனால் தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கிறார். அப்போது நாயகி மீதா ரகுநாத்தை பார்க்கிறான். அதன் பிறகு அவன் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் நாயகி தன் தந்தை, தாய் மரணத்திற்கு காரணம் தன்னுடைய ராசிதான் என்று நாயகி நினைக்கிறாள். இருந்தாலும் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் நாயகனின் குறட்டை விடுவதால் நாயகி தூங்காமல் உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விநாயக்.
Good Night Movie விமர்சனம்
இந்த படம் குறட்டை பிரச்சனையை மையப்படுத்தி மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரச்சனைகள் இருக்கும் ஒரு நபரை ஒருவரை கிண்டல் செய்வதன் மூலம், அவர்கள் எந்த அளவிற்கு தாழ்வு மனப்பான்மைக்கு செல்கிறார்கள். தன்னை நேசிப்பவர்களுடன் சாதாரணமாகப் பழக முடியாமல் தவிக்கிறார் என்பதை சொல்லி புரிய வைத்துள்ளது. அதேபோல, திருமணமானவர்களிடம் இந்த சமூகம், விஷேசம் இல்லையா? எழும்பும் கேள்விக்கு பின்னால் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு ஏற்படும் மானவலியை காட்சிகளால் கடத்தியுள்ளனர. மேலும் தாய் தந்தையை இழந்தவர்களை நோக்கி வைக்கப்படும் பல கேள்விகளையும், அன்பிற்காக ஏங்கும் அவர்களின் உணர்வுகளையும்கட்சிதமாக கட்டமைத்துள்ளனர். இந்த கதையை சோகத்துடன் படம் எடுக்காமல், ரசிக்க வைக்கும் நகைச்சுவையுடன்ம் படமாக்கி மனதுக்குள் கடத்திவிடுகிறார் இயக்குனர்.