Google CEO Sundar Pichai Birthday : Google CEO சுந்தர் பிச்சைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Google சுந்தர் பிச்சை தற்போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியாவில் CEO-ஆக Google மற்றும் Alphabet-லில் பணிபுரிந்து வாழ்ந்து வருகிறார்.
Google சுந்தர் பிச்சையின் இளமைப் பருவம் (Google CEO Sundar Pichai Birthday) :
Google சுந்தர் பிச்சை தந்தை ரகுநாத பிச்சைக்கும் மற்றும் தாயார் லட்சுமிக்கும் ஜூன் 10, 1972 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் (Google CEO Sundar Pichai Birthday) பிறந்தவர். இவரது தந்தை ரகுநாத பிச்சை GEC-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர். தாயார் லட்சுமி ஒரு ஸ்டெனோகிராபர் ஆவார். ஒரு சிறுவனாக வளரும்போது, பிச்சை தனது தாயார், தந்தை மற்றும் சகோதரனுடன் ஒரு சிறிய நெருக்கடியான வீட்டில் வாழ்ந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே சுந்தர் பிச்சை தொழில்நுட்பத்தில் ஆர்வத்தையும், குறிப்பாக தொலைபேசி எண்களில் அசாதாரண நினைவாற்றலையும் வெளிப்படுத்தி உள்ளார்.
இவர் சென்னை அசோக் நகரில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பும் மற்றும் சென்னை IIT வளாகத்தில் உள்ள ’Vanavaani’ பள்ளியில் +2 வகுப்பும் படித்தவர். பிறகு IIT கரக்பூரில் உலோகப் பொறியியல் (B.Tech, 1993) பயின்ற இவர், காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பிறகு அவருக்கு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், உலோக அறிவியல் துறையில் முதுலகலைப்பொறியியல் (M.S. 1995) பட்டம் படிக்க உதவித்தொகை வழங்கப்பட்டது.
Google சுந்தர் பிச்சையின் சிறந்த பணி வாழ்க்கை :
வெளிநாட்டிற்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை ஆரம்பத்தில் McKinsey & Co என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அப்ளைடு மெட்டீரியல்ஸ் மற்றும் மேலாண்மை ஆலோசனைத் துறையில் பணியாற்றிய சுந்தர் பிச்சை பின்னர் மேலாண்மைத் துறையிலும் சாதிக்க எண்ணி மீண்டும் கல்வியை வார்டன் மேலாண்மைப் பள்ளியில் தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டு M.B.A. பட்டம் பெற்றார். தனது முதல் வேலையை McKinsey & Co என்ற கம்பெனியில் ஆலோசகராக தொடங்கி, Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் பணியைத் தொடர்ந்த சுந்தர் பிச்சை, அதன்பின் Accenture நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின் ஏப்ரல் 26 2004 ஆம் ஆண்டு கூகுளில் இணைந்து அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளரானார்.
இதன்விளைவாக ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பான வேலைகள் ஆனது சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டு ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் சுந்தர் பிச்சை உருவெடுத்தார். கூகுள் டூல்பார், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக தன் முழு உழைப்பையும் செலுத்தி கூகுளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகியுள்ளார். இப்படிப்பட்ட இவரின் திறமையால் வந்த கூகுள் குரோமானது, பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற போட்டியாளர்களை ஓரம்கட்டி விட்டு உலகின் நம்பர் 1 தேடல் இடமாக மாறியுள்ளது. பின், ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் உட்பட பல புதிய தயாரிப்புகளின் போதும், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
இதையடுத்து சுந்தர் பிச்சைக்கு 2013-ம் ஆண்டில் ஆண்ட்ராய்டை நிர்வகிக்கும் பணி ஆனது வழங்கப்பட்டது. தொழில்நுட்ப துறையில் தனது திறமையால் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி, தற்போது பெரும் தொழிலதிபர்கள் நிறுவனர்கள் பங்குவகிக்கும் பணக்காரப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சை ஆல்பபெட் இன்க் மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுல் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக பதவியை பெற்று பணியாற்றி வருகிறார். 2022 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை 226 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது ஆயிரத்து 854 கோடி ரூபாய் ஊதியம் பெற்றார்.
Google சுந்தர் பிச்சையின் குடும்ப வாழ்க்கை :
சுந்தர் பிச்சையும் அஞ்சலி பிச்சையும் காரக்பூரில் உள்ள IIT கல்லூரியில் நண்பர்களாக சந்தித்து பின் கணவன் மனைவியாக உயர்ந்தனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற இடத்தை சேர்ந்த கெமிக்கல் இன்ஜினியரான அவரது மனைவி அஞ்சலி பிச்சை Intuit நிறுவனத்தில் வணிக இயக்க மேலாளராக சிறப்பாகச் செயல்பட்டவர். கிரண் மற்றும் காவ்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மற்றவர்களின் சிரமங்களை உணர்ந்து பல தொண்டு நிறுவனங்களின் சார்பாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஏழ்மையில் வாடும் குழந்தைகளுக்கு The Bay Area Discovery Museum என்ற அமைப்பின் மூலம் கல்வி கற்க உதவி வருகிறார். இந்தியா – அமெரிக்கா அறக்கட்டளை நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறார்.
Google சுந்தர் பிச்சையின் பொழுதுபோக்குகள் :
செஸ் விளையாடுதல், படித்தல், ஓவியம் வரைதல் மற்றும் பாலிவுட் திரைப்படங்களைப் பார்த்தல், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் அவர் லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா எஃப்சியை விரும்புதல். அறிவியல், வினாடி வினா மற்றும் புதிர்களில் ஆர்வம் காட்டுதல் பொழுதுபோக்குகள் ஆகும். அவரது இளைய வயது கனவு ஆனது தொழில்முறை கிரிக்கெட் வீரர் ஆவது ஆகும். அவர் உலகளாவிய தலைமைத்துவ விருதை 2019-ல் வென்றார். அவர் இந்திய அரசிடமிருந்து 2022-ல் பத்ம பூஷன் விருதை பெற்றார். தற்போது 52 வயதாகும் சுந்தர்பிச்சை தனது வாழ்க்கையின் பெரும் நாட்களை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஆல்டோஸில்தான் கழித்திருக்கிறார். இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைவருக்கும் சுந்தர்பிச்சையின் வெற்றிக் கதை ஒரு இன்ஸ்பிரேஷனாக (Inspiration) இருந்து வருகிறது. சுந்தர்பிச்சையின் பர்சனல் வாழ்க்கை ஆனது வளர்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாகவும் மற்றும் வழிகாட்டியாகவும் உள்ளது என்றால் அது மிகையில்லை.
Latest Slideshows
-
Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
-
Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
-
Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
-
Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
-
SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்