Google Guru : UPSC தேர்வுக்கு வகுப்பெடுக்கும் 7வயது சிறுவன்
UPSC தேர்வெழுதும் மாணவர்களுக்கு உத்திரபிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் வகுப்பெடுக்கிறார் :
மாணவர்கள் Union Public Service Commission தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்றால் கடின உழைப்பும் மற்றும் அர்ப்பணிப்பும் மிகவும் அவசியம் ஆகும். இந்த Union Public Service Commission தேர்வில் மிகவும் சொற்பமானவர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். இந்த Union Public Service Commission தேர்வானது அந்த அளவிற்கு அறிவுக்கூர்மையை சோதிக்கும் கடினமான தேர்வாக இருக்கும்.
'Google Guru' உத்திரபிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் :
உபாத்யாய் உத்திரபிரதேச மாநிலம் விருந்தாவனத்தில் உள்ள கோர நகர் காலனியைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஆவான். சிறுவன் உபாத்யாய்யின் நினைவாற்றலை கண்டு வியந்தவர்கள் அனைவரும் உபாத்யாய்யை ‘Google Guru’ என்று அழைத்து வருகின்றனர். இந்த சிறுவன் உபாத்யாய் UPSC தேர்வுக்கான படிப்பில் சிறந்து விளங்குகிறான். சிறுவன் உபாத்யாய் தனது ஐந்தாவது வயதிலிருந்தே UPSC மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறான். அதோடு மட்டுமல்லாமல் சிறுவன் உபாத்யாய் மாணவர்களுக்கு 14 பாடங்களை சொல்லித் தருகிறான்.
சிறுவன் உபாத்யாய்க்கு "India Book Of Records" சான்றிதழ் வழங்கப்பட்டது :
சமீபத்தில் சிறுவன் உபாத்யாய்க்கு அயோத்தி ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் “India Book Of Records” சான்றிதழை வழங்கி கௌரவித்தார். “India Book Of Records” சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், Google Guru சிறுவன் உபாத்யாய் பல சாதனைகளையும் படைத்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு இடங்களில் சிறுவன் உபாத்யாய் விருந்தினர் விரிவுரையாளராக (Guest Lecturer) பணியாற்றி வருகிறார்.
சிறுவன் உபாத்யாய் பற்றி தந்தை அரவிந்த் குமார் கருத்து :
உபாத்யாவின் தந்தை அரவிந்த் குமார் உபாத்யாய் ஒரு நேர்காணலில், “என் மகன் உபாத்யாய்யினுக்கு விரைவாக மனப்பாடம் செய்யும் திறன் உள்ளது. உபாத்யாய் சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே, 60 நாடுகளின் கொடி மற்றும் அந்த நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக கூறினான். உபாத்யாய்யின் அறிவாற்றலை கண்ட பல மாணவர்கள் ஆன்லைனிலும் மற்றும் ஆஃப்லைனிலும் பல்வேறு பாடங்களை இவனிடம் பயின்று வருகிறார்கள். இந்த கல்வி பயிலும் மாணவர்கள் பட்டியலில் பொறியியல் மற்றும் UPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் அடங்குவர்” என்று கூறியுள்ளார். கலாம்தான் தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்று கூறும் சிறுவன் கூகுள் குரு உபாத்யாய் APJ அப்துல் கலாமைப்போல தான் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
Latest Slideshows
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்