Google Introduced Quantum Computing Chip : கூகுள் நிறுவனம் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பை அறிமுகம் செய்துள்ளது

உலகளவில் தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் புதிதாக ‘குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பை’ அறிமுகம் (Google Introduced Quantum Computing Chip) செய்துள்ளது. இந்த சிப்புக்கு அந்நிறுவனம் வில்லொ (Willow) என பெயர் வைத்துள்ளது. அதாவது சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஒரு கணக்கை தீர்க்க 10 செப்டில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் கணக்கை வெறும் 5 நிமிடங்களில் இந்த வில்லொ சிப் செய்து முடிக்கும். மேலும் 10 செப்டில்லியன் ஆண்டுகள் என்பது இந்த பிரபஞ்சத்தின் வயதை விட அதிகமாகும்.  

மேலும் கடினமான, சிக்கலான மற்றும் சாத்தியமற்ற மற்றும் மனிதர்களால் கூட செய்ய முடியாத கணக்கை இந்த வில்லொ (Willow) சிப் வெறும் 5 நிமிடத்தில் செய்து முடிக்கிறது. மேலும் கூகுள் நிறுவனம் இந்த சிப்பை அறிமுகம் செய்து அதன் சக்தியை மீண்டும் உலகத்திற்கு நிரூபித்திருக்கிறது.

குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் (Google Introduced Quantum Computing Chip)

கூகுள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை (Google CEO) அவருடைய எக்ஸ் பக்கத்தில் இந்த சக்தி வாய்ந்த வில்லொ சிப் பற்றிய தகவலை அறிமுகம் (Google Introduced Quantum Computing Chip) செய்து வைத்தார். இந்த பதிவில் அவர் எங்களின் அதிநவீன ‘குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பை’ அறிமுகப்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் இது கணினி துறையில் 30 ஆண்டுகால சவாலை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிகமான குவிட்களைப் பயன்படுத்தும் போதும் கூட, பிழைகளை குறைக்கும் புதிய குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம் எனவும், இது பெஞ்ச்மார்க் சோதனையில் ஒரு நிலையான கணக்கிற்கு 5 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தீர்வை வழங்கியுள்ளது எனவும்  தெரிவித்துள்ளார். அதாவது இந்த கணக்கை தீர்ப்பதற்கு சூப்பர் கம்ப்யூட்டருக்கு சுமார் 10^25 ஆண்டுகள் காலம் தேவைப்படும்.

எலான் மஸ்க் பாராட்டு

சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இந்த பதிவை பார்த்து வியந்த எலான் மஸ்க் ‘Wow’ என கமெண்ட் செய்திருக்கிறார். மேலும் அவர் இது முற்றிலும் உண்மையிலேயே ஒரு அசாதாரணமான சாதனை (Google Introduced Quantum Computing Chip) என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வில்லொ சிப்பின் மூலம் பூமியில் பல அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் கண்டுபிடிக்க முடியும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பின் நன்மைகள்

இந்த குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பின் தொழில்நுட்பத்தின் (Google Introduced Quantum Computing Chip) மூலம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி சார்ந்த பயன்களை பல மடங்கு மேம்படுத்தவும், இதன் மூலம் மருத்துவத்துறைக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிப்பது, புதிய பேட்டரி தொழில்நுட்பம் உருவாக்குவது என பல துறைகளில் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply